PDF என்பது என்ன?

இப்போது வரும் பெரும்பாலான மென்நூல்கள்,மென்ப்பொருள் கையேடுகள் PDF கோப்புகளாக வருகிறது. PDF என்பது Portable Document Format என்பதன் சுருக்கம் ஆகும்.இதன் சிறப்பு என்னவென்றால் இந்த கோப்பில் உள்ள வாக்கியங்களை எந்த கணினியிலிருந்து படிக்கமுடியும்.அதற்கு தேவை PDF reader என்ற மென்பொருள் இருந்தால் போதும்.இது இலவசமாகவே கிடைக்கிறது. PDF -ன் அவசியம் என்ன? நமது கணினியில் தமிழில் ஒரு எழுத்துருவை பயன்படுத்தி ஒரு ஃபைலை உருவாக்குவோம்.அதே ஃபைலை மற்றொரு கணினியில் படிப்பதற்காக திறந்தால் சதுர வடிவமாக எழுத்துக்கள் படிக்க முடியாதவாறு இருக்கும். இந்த கணினியில் ... Read More »

பாஸ்வேர்டுக்கும் ஒரு சட்டம்!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கொண்டு வரப்பட உள்ள புதிய சட்டம் ஊகிக்கக்கூடிய பாஸ்வேர்டுக்குத் தடை போடுவதாக அமைந்துள்ளது. தகவல் தனியுரிமைச் சட்டப்படி உற்பத்தி நிறுவனங்கள் இனி, தங்கள் சாதனங்களில் பலவீனமான பாஸ்வேர்டுகளை அமைக்கக் கூடாது. அதாவது, ஹேக்கர்கள் எளிதில் ஊகித்துவிடக்கூடிய பலவீனமான பாஸ்வேர்டு களை அமைக்காமல், வலுவான பாஸ்வேர்டுகளை உருவாக்க வேண்டும். ‘ரவுட்டர்’ போன்ற சாதனங்களில் டீஃபால்ட்டாக பாஸ்வேர்டுகள் அமைக்கப்படுகின்றன. பொதுவாக, நிறுவனங்கள் அட்மின் அல்லது பாஸ்வேர்டு போன்ற வார்த்தைகளை பாஸ்வேர்டாக அமைத்துத் தருகின்றன. பயனாளிகள் சாதனத்தை வாங்கியதும் இத்தகைய நன்கறியப்பட்ட படு பலவீனமான ... Read More »

தேடல் வரலாற்றை நீக்கலாம்!

இணைய நிறுவனங்கள் தகவல்களைத் திரட்டுவது தொடர்பான சர்ச்சை வலுப்பெற்றுவருகிறது. இந்நிலையில் தேடி இயந்திரமான கூகுள், பயனாளிகள் தங்கள் தேடல் வரலாறுத் தொடர்பான தகவல்களை நீக்குவதை எளிதாக்கி இருக்கிறது. தேடி இயந்திரமான கூகுள், பயனாளிகளின் தேடல் தொடர்பான பல்வேறு தகவல்களைச் சேகரித்து, சேமித்து வைக்கிறது. பயனாளிகளுக்கு ஏற்ற தேடல் முடிவுகளை அளிக்கவும், அவர்கள் தேடல் விருப்பங்களுக்குப் பொருத்தமான விளம்பரங்களை அளிக்கவும் கூகுள் இந்தத் தகவல்களைப் பயன்படுத்துகிறது. அதாவது, ஒருவரின் தேடல் வரலாறு முழுவதையும் கூகுள் சேமித்து வைக்கிறது. தனிப்பட்ட அடையாளங்களோடு இந்தத் தகவல்கள் சேமிக்கப்படுவதில்லை என்று ... Read More »

சார்ட்களை உருவாக்கும் இணையம்

தகவல்களைக் காட்சி வடிவில் எளிதாகப் புரிந்துகொள்ள வழி செய்யும்  ‘இன்போகிராப்’ எனப்படும் தகவல் வரைபடங்களை உருவாக்கிக்கொள்ளும் சேவையை ‘கேன்வா’ உள்ளிட்ட இணையதளங்கள் அளிக்கின்றன. இவற்றின் மூலம் விதவிதமான இன்போகிராப்களை நீங்களே உருவாக்கலாம். இதேபோல, ‘சார்ட்’ எனக் குறிப்பிடப்படும் வரைபடங்களை உருவாக்கிக்கொள்ள ‘சார்டிபை’ (https://chartify.io/) இணையதளம் வழிசெய்கிறது. நாளிதழ்கள், பத்திரிகைகளில் கட்டுரைகளுடன் அல்லது தனியே பார்க்கக்கூடிய பை சார்ட், பார் சார்ட், காலம் சார்ட் போன்ற சார்ட்களை இதன் மூலம் எளிதாக உருவாக்கிக்கொள்ளலாம். எல்லா சார்ட்களுமே டெம்பிளேட் வடிவில் இருக்கின்றன. அவற்றைத் தேர்வுசெய்து, அதில் தகவல்களை ... Read More »

இனி குழுக்களிலேயே தனி நபருக்கு பதில் மெசேஜ் அனுப்பலாம்: வாட்ஸ் அப்பில் புதிய வசதி

குழுக்களிலேயே அந்தரங்க முறையில், தனி நபருக்கு பதில் மெசேஜ் அனுப்பும் வசதியை வாட்ஸ் அப் அறிமுகப்படுத்தி உள்ளது. ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தப்படும் ‘மெசேஜிங்’ சேவைகளில் பிரபலமானதாகவும், அதிகம் பயன்படுத்தப்படும் சேவையாகவும் இருக்கும் ‘வாட்ஸ் ஆப்’, இணைய உலகின் வெற்றிக்கதைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதன் அடையாளமாகத்தான் கடந்த 2014-ம் ஆண்டில் முன்னணி சமூக வலைதளமான‌ ஃபேஸ்புக் அதை 19 பில்லியன் டாலர் விலை கொடுத்து வாங்கியது. இன்றைக்கு இந்தியாவில் 20 கோடிக்கும் மேலானோர் வாட்ஸ் அப்பைப் பயன்படுத்துகின்றனர். இது, முன்னணிச் செயலிகளில் ஒன்றாக இருப்பதோடு, வீடியோ ... Read More »

இன்ஸ்டாகிராமில் வாய்ஸ் மெசேஜ்!

ஒளிப்படப் பகிர்வு சேவையான இன்ஸ்டாகிராம் பயணர்களுக்கான புதிய வசதிகளைத் தொடர்ந்து அறிமுகம் செய்துவருகிறது. அந்த வரிசையில், வாய்ஸ் மெசேஜ் அனுப்பும் வசதியை இப்போது அறிமுகம் செய்துள்ளது. இன்ஸ்டாகிராம் டைரக்ட் வசதி மூலம் பயனாளிகள் தங்கள் ஃபாலோயர்கள் அல்லது நண்பர்களுக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பலாம். வாட்ஸ் அப் அல்லது ஃபேஸ்புக் மெசஞ்சரில் உள்ளதுபோலவே பயனாளிகள் ஒரு நிமிட ஒலி வடிவச் செய்தியை அனுப்பி வைக்கலாம். இதற்காக இன்ஸ்டாகிராம் செயலியின் லேட்டஸ்ட் வடிவத்தைத் தரவிறக்கம் செய்ய வேண்டும். அதன் பிறகு, இன்ஸ்டாகிராம் உரையாடல் வசதியில் மைக் ஐகானை ... Read More »

தொழில்நுட்பச் செய்தி செயலி

தொழில்நுட்பச் செய்திகளில் ஆர்வம் கொண்டவர்களுக்கான செய்தி வாசிப்பு செயலியாக ‘ஸ்வைப் ஒன் ரீடர்’ அறிமுகம் ஆகியுள்ளது. தொழில்நுட்பச் செய்திகளை அளிக்கும் தளங்களிலிருந்து பல்வேறு தலைப்புகளில் செய்திகளை இந்தச் செயலி தொகுத்து அளிக்கிறது. ரெட்டிட், ஹேக்கர் நியூஸ், பிராடக்ட் ஹண்ட் உள்ளிட்ட தளங்களின் செய்திகளை இந்தச் செயலியில் அணுகலாம். ஆண்ட்ராய்டு போன்களுக்கானது இந்தச் செயலி. Read More »

இணையத்தில் சேர்ந்து படிக்கலாம்

ஆன்லைனில் பலவித பாடத்திட்டங்களைக் கற்று பட்டயச் சான்றிதழ்களைப் பெறலாம். இணைய பாடத்திட்டங்களைப் பட்டியலிடுவதோடு அவற்றை இணைந்து படிப்பதற்கான இணைய நண்பர்களைத் தேடிக்கொள்ளவும் வழிசெய்கிறது ஸ்டேக்ஸ்.கோர்சஸ் (https://stacks.courses/) இணையதளம். இந்தத் தளத்தில் உள்ள தேடல் வசதியைப் பயன்படுத்தி விரும்பிய இணையப் பாடத்திட்டத்தைத் தேர்வு செய்யலாம். அதன் பிறகு அதே பாடத்திட்டத்தைப் பயிலும் நண்பர்களை இதே தளத்தின் மூலமாகக் கண்டறிந்து அவர்களோடு இணைந்து பயிலலாம். Read More »

மொபைலை கம்ப்யூட்டரில் கனெக்ட் செய்து மெசேஜ் அனுப்புவது எப்படி?

நம் அனைவரின் ஸ்மார்ட்போனிலும் டெக்ஸ்ட் மெசேஜ் செயலி இருக்கும். வாட்ஸ் ஆப் மற்றும் ஹைக் போன்ற சாட்டிங் செயலிகள் வந்த பின்னர் டெக்ஸ்ட் மெசேஜ் செயலியின் பயன்பாடு குறைந்துவிட்டது. முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.! டெக்ஸ்ட் மெசேஜ் தற்பொழுது டெக்ஸ்ட் மெசேஜ் செயலியில் வங்கி விபரங்கள், ஜோமாட்டோ ஆர்டர் விபரங்கள் போன்ற பயன்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகின்றது. வாட்ஸ் ஆப் போன்ற செயலிகளை விட டெக்ஸ்ட் மெசேஜ் செயலி பாதுகாப்பானது என்பது பலருக்கும் இன்னும் தெரியவில்லை. மெசேஜ் ஃபார் வெப் ... Read More »

ஜிமெயில் அல்லது கூகுள் அக்கவுன்ட் பாஸ்வேர்டு மறந்து விட்டதா?  ரிக்கவர் செய்வது எப்படி?

கூகுள் அக்கவுன்ட் சேவையை பயன்படுத்தும் போது சில சமயங்களில், பாஸ்வேர்டு மறந்து போகும் நிலையை நம்மில் பலரும் எதிர்கொண்டு இருப்போம். ஒரே பாஸ்வேர்டினை ஜிமெயிலுக்கும் செட் செய்திருக்கும் போது நிலமை இன்னும் மோசமாகி விடும். இதைவிட ஹேக்கர்கள் உங்களது கூகுள் அக்கவுன்ட்டை ஹேக் செய்து உங்களது பாஸ்வேர்டை மாற்றியிருப்பின் நிலமை மேலும் மோசமாகி விடும். சிலர் மூன்றாம் தரப்பு செயலிகளை கொண்டு தங்களது பாஸ்வேர்டுகளை ஒரே இடத்தில் சேமித்து வைத்திருப்பர், எனினும் பலர் இவ்வாறு செய்வதில்லை. இவ்வாறு ஆகும் போது, புது பாஸ்வேர்டை பெறுவது ... Read More »