இன்ஸ்டாகிராமில் வாய்ஸ் மெசேஜ்!

ஒளிப்படப் பகிர்வு சேவையான இன்ஸ்டாகிராம் பயணர்களுக்கான புதிய வசதிகளைத் தொடர்ந்து அறிமுகம் செய்துவருகிறது. அந்த வரிசையில், வாய்ஸ் மெசேஜ் அனுப்பும் வசதியை இப்போது அறிமுகம் செய்துள்ளது. இன்ஸ்டாகிராம் டைரக்ட் வசதி மூலம் பயனாளிகள் தங்கள் ஃபாலோயர்கள் அல்லது நண்பர்களுக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பலாம்.

வாட்ஸ் அப் அல்லது ஃபேஸ்புக் மெசஞ்சரில் உள்ளதுபோலவே பயனாளிகள் ஒரு நிமிட ஒலி வடிவச் செய்தியை அனுப்பி வைக்கலாம். இதற்காக இன்ஸ்டாகிராம் செயலியின் லேட்டஸ்ட் வடிவத்தைத் தரவிறக்கம் செய்ய வேண்டும். அதன் பிறகு, இன்ஸ்டாகிராம் உரையாடல் வசதியில் மைக் ஐகானை அடையாளம் கண்டு, ஒலி வடிவச் செய்தியை அனுப்பலாம்.

தவிர, இன்ஸ்டாகிராம் படங்களுக்கான குரல் வழி விளக்கம் அளிக்கும் புதிய வசதியும் அறிமுகமாகியுள்ளது. இந்த வசதியின் மூலம் பார்வைக் குறைபாடு கொண்டவர்களும் இனி இன்ஸ்டாகிராமைத் தடையில்லாமல் பயன்படுத்தலாம். பார்வைக் குறைபாடு கொண்டவர்கள், இணையதளங்களில் உள்ள தகவல்களை வாசித்துக்காட்டும் ஸ்கிரீன் ரீடர் வசதியைப் பயன்படுத்தும்போது, படத்தை விவரிப்பது போன்ற விளக்கத்தைக் கேட்க முடியும்.

செயற்கை நுண்ணறிவு நுட்பம் கொண்டு இன்ஸ்டாகிராம், படங்களுக்கான இந்தக் குரல் வழி விளக்கத்தை அளிக்கிறது. படத்தில் உள்ள பொருட்களைச் செயற்கை நுண்ணறிவு நுட்பம் கண்டுணர்ந்து அதை வாசித்துக் காட்டும். இந்த வசதியை மேம்படுத்தும் வகையில், பயனாளிகள் படங்களைப் பதிவேற்றும்போதே அதற்கான விரிவான விளக்கத்தைச் சமர்ப்பிக்கும் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*