Author Archives: ict news

தேர்தல் தகவலுக்கு புதிய செயலி : இனி, விரல் நுனியில், ‘அப்டேட்’

இனி, விரல் நுனியில், ‘அப்டேட்’ தேர்தல் தகவல்களை துல்லியமாக தேடிக் கொடுக்கும், புதிய, ‘மொபைல் ஆப்’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.’ஸ்மார்ட் போன்’ வந்த பிறகு, தேர்தல் கமிஷனும், டிஜிட்டல் உலகத்துக்குள் நுழைந்துவிட்டது.கடந்த இரண்டு ஆண்டுகளாக, ‘ஆன்லைன்’ மூலமாக, வாக்காளர் பட்டியல் தேடுதல், பெயர்களை கண்டறிதல், ஓட்டுச்சாவடி கண்டறிதல் போன்ற சேவைகளை அளித்து வந்தது. சில, ‘மொபைல் ஆப்’களையும், அறிமுகம் செய்திருந்தது.இந்நிலையில், ‘ஓட்டர்ஸ் ஹெல்ப்லைன்’ என்ற பெயரில், புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.மொபைல் போன் மூலமாக, இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொண்டால், ஒட்டுமொத்த தேர்தல் கமிஷன் ... Read More »

எழுத்துருவை அறிய

இணையத்தில் பல வகையான எழுத்துருக்கள் உள்ளன. ஒரு சில எழுத்துருக்கள் எளிமையாகவும் ஈர்ப்புடையதாகவும் இருக்கலாம். இத்தகைய எழுத்துருக்களை நீங்கள் பயன்படுத்த விரும்பலாம். ஆனால், குறிப்பிட்ட அந்த எழுத்துரு தொடர்பான தகவல் தெரிந்தால் மட்டுமே இது சாத்தியம். இதுபோன்ற நேரங்களில் ‘வாட்திபாண்ட்’ செயலி வழிகாட்டுகிறது. எழுத்துருக்களை போன் கேமராவில் படம் எடுத்து, இந்தச் செயலியில் சமர்ப்பித்தால் அந்த எழுத்துருவின் பெயர் என்ன என்பது உள்ளிட்ட தகவல்களை இந்தத் தளம் தெரிவிக்கிறது. வடிவமைப்பாளர்களுக்கும் எழுத்துருக்களை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கும் இந்தச் செயலி பயனுள்ளதாக இருக்கும். மேலும் தகவல்களுக்கு: http://www.myfonts.com/WhatTheFont/mobile/ Read More »

யூடியூப்பில் நேரலை வசதி

யூடியூப் பிரியர்கள் இனி டெஸ்க்டாப்பிலிருந்தே எளிதாக நேரலை செய்யலாம். இதற்கான புதிய வசதி ‘யூடியூப் லைவ்’ மூலம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே, ஸ்மார்ட்போன்களில் செயலி வடிவில் இந்த வசதி உள்ளது. ஆனால், டெஸ்க்டாப் கம்ப்யூட்டரிலிருந்து நேரலை செய்ய வேண்டும் எனில், ‘என்கோடிங்’ மென்பொருளைப் பயன்படுத்த வேண்டும். இந்த நடைமுறையை எளிதாக்கும் வகையில் கம்ப்யூட்டரிலிருந்து வெப்கேம் வழியே நேரலை செய்யும் வசதியை யூடியூப் அறிமுகம் செய்துள்ளது. தவிர, ஸ்மார்ட்போன் செயலிகளிலும் இந்த வசதியில் கூடுதல் அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. போன் கேமராவிலிருந்தும் நேரலை வசதி ... Read More »

நிதி கால்குலேட்டர்

இணையத்தில் பலவிதமான கால்குலேட்டர்களை அணுகலாம். இதற்கென பிரத்யேகமான தளங்கள் இருக்கின்றன. இந்த வரிசையில் இப்போது நிதி விஷயங்களுக்கான கால்குலேட்டராக ‘பைனான்சியல்டூல்பெல்ட்’ (https://www.financialtoolbelt.com/) அறிமுகமாகி இருக்கிறது. இந்தத் தளத்தில் நிதிச் சுதந்திரம் பெறுவதற்குத் தேவையான தொகையைக் கணக்கிடுவது முதல் பகுதி நேரப் பணிக்கான பலனைக் கணக்கிடுவதற்கான கால்குலேட்டர்வரை பலவித சேவைகள் இருக்கின்றன. Read More »

முகவரிகளைப் பகிர புதிய வழி

ஒரே இணைப்பில் ஒன்றுக்கும் மேற்பட்ட பல இணைய முகவரிகளைப் பகிர்ந்துகொள்வதற்கான வசதியை ‘மெனிலிங்க்’ இணையதளம் அறிமுகம் செய்துள்ளது. சமூக ஊடகங்களிலும் இணைய சேவைகளிலும் பல்வேறு நோக்கங்களுக்காக இணைய இணைப்புகளைப் பகிர வேண்டிய தேவை ஏற்படலாம். ஓரிரு முகவரிகள் என்றால் எளிதாகப் பகிர்ந்துவிடலாம். ஆனால், ஒரே நேரத்தில் பல இணைய முகவரிகளைப் பகிர்வது சிக்கல்தான். இதை எளிதாகச் செய்துகொள்ள மெனிலிங்க் இணையதளம் உதவுகிறது. இதில் உறுப்பினராக இணைந்த பிறகு, இணைய முகவரிகளை உள்ளடக்கிய இணைப்பை உருவாக்கி பகிர்ந்துகொள்ளலாம். இணைய முகவரி: https://manylink.co/  Read More »

கோடிங் கற்கலாம் வாங்க!

‘கிராஸ்ஹாப்பர்’ எனும் பெயரில் புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது தேடியந்திரமான கூகுள். ஆண்ட்ராய்டு, ஐபோன்களில் செயல்படும் இந்தச் செயலி மூலம் பயனாளிகள் ‘கோடிங்’ அடிப்படையைக் கற்கலாம். இணையத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் ஜாவா ஸ்கிரிப்ட் உள்ளிட்டவற்றில் ‘கோடிங்’ அடிப்படைகளை மிக எளிதாக கேம்கள் வடிவில் கற்கலாம். ஒவ்வொரு கேமாக விளையாடியபடி, ஒவ்வொரு கட்டமாக முன்னேறலாம். இவற்றில் விநாடி வினாக்களும் அமைந்துள்ளன. தகவல்களுக்கு: https://grasshopper.codes/   Read More »

வீடியோ புதிது: அந்தக் காலத்தைக் காண…

நாளுக்கு நாள் பழைய தொழில்நுட்பங்கள் வழக்கொழிந்து வருகின்றன. ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த கேஸட், ஃபிளாப்பி டிஸ்க், டயல் போன் போன்ற சாதனங்களை இக்காலத் தலைமுறையினர் பார்த்துகூட இருக்க மாட்டார்கள். ஒரு காலத்தில் பிரபலமாக இருந்து பின்னர் வழக்கொழிந்து போய்விட்ட தொழில்நுட்பங்களைக் காணொலிப் படங்களாக அறிமுகம் செய்கிறது ‘மியூசியம் ஆப் ஆப்சலீட் ஆப்ஜெக்ட்ஸ் யூடியூப் சேனல்’. இந்த சேனலில் குண்டு பல்ப், டைப்ரைட்டர், போனோகிராம் போன்ற தொழில்நுட்பங்களை காணலாம். இதுவும் ஒரு வகையான ஆவணப்படுத்தல்தான் அல்லவா! Read More »

ஐமேக்குக்கு வயது 20

புதிய கம்ப்யூட்டர்கள் பற்றியும் லேட்டஸ்ட் கேட்ஜெட் பற்றியும்தான் ஆர்வத்துடன் விவாதிக்க வேண்டுமா என்ன? ஆப்பிளின் பழைய கம்ப்யூட்டர்களில் ஒன்றான ஐமேக்கின் சிறப்பம்சங்கள் பற்றிதான் இணையத்தில் இப்போது ஆர்வத்துடன் பேசப்படுகிறது. ஐமேக் அறிமுகமாகி 20 ஆண்டுகள் ஆகும் நிலையில் ஆப்பிள் நிறுவன அபிமானிகளும் தொழில்நுட்ப வல்லுநர்களும் இந்த கம்ப்யூட்டர் தொடர்பான நினைவலைகளைப் பகிர்ந்துகொண்டு வருகின்றனர். இணைய வசதிக்கு ஏற்றதாக அறிமுகமான ஐமேக்கில் பல சிறப்பம்சங்கள் இருந்தாலும் கம்ப்யூட்டர் வடிவமைப்பில் அழகியல் நோக்கில் அது ஒரு சிறிய புரட்சியாகவே அமைந்தது என்கின்றனர். Read More »

ஒளிப்படங்களைப் பகிர புதிய வழி

ஒளிப்படங்களைத் தனிப்பட்ட முறையில் பகிர்ந்துகொள்ள வழி செய்யும் வகையில் ‘கேப்சரிட்’ செயலி அமைந்துள்ளது. ஒளிப்படங்களைப் பகிர்ந்துகொள்ளப் பல செயலிகள் இருந்தாலும் அவை பெரும்பாலும் பொதுவெளியில் பகிர்ந்துகொள்ளவே வழி அமைகின்றன. இதற்கு மாறாக தனிப்பட்ட படங்களை நண்பர்கள், குடும்ப வட்டத்தில் பகிர விரும்பினால், அதற்கான வழியாக இந்தச் செயலி அமைகிறது. Read More »

பயண இணையதளம்

சுற்றுலாப் பயணிகள் தங்களுக்கான பயணத் திட்டமிடலைத் தாங்களே எளிதாக மேற்கொள்ள வழிகாட்டுகிறது ‘டிரிப்பினஸ்’ இணையதளம். இந்தத் தளத்தில் எந்த நகரிலிருந்து பயணத்தைத் தொடங்க இருக்கிறோம் என்பதைத் தெரிவித்து, பயணம் செய்ய இருக்கும் நகரையும் தெரிவித்தால் அதற்கான விமான வழிகள், தங்குமிடங்கள், சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள், ரெஸ்டாரண்ட்கள் என அனைத்தையும் இந்தத் தளம் காட்டுகிறது. அவற்றிலிருந்து விருப்பமானவற்றைத் தேர்வுசெய்து அதன் மூலமே பயண வழிகாட்டியை உருவாக்கிக்கொள்ளலாம். பயணிகள் தாங்கள் விரும்பும் பயண வகையைக் குறிப்பிட்டால் அதற்கேற்ற சுற்றுலா தலங்களையும் இது காட்டுகிறது. Read More »