Author Archives: ict news

டைப்பிங் செய்ய உதவும் தளம்

முன்புபோல இப்போது அதிகமானோர் டைப்பிங் வகுப்புக்குச் செல்வதில்லை. பெரும்பாலானோர் கம்ப்யூட்டரிலேயே டைப்பிங் செய்யப் பழகிவிடுகின்றனர். இருப்பினும், டைப்பிங் திறனை அதிகரித்துக்கொள்ளப் பயிற்சி தேவை என நினைத்தால் ‘டைப்பிங்கிளப்’ இணையதளம் அதற்கு உதவுகிறது. இந்தத் தளத்தில் பல்வேறு அளவிலான டைப்பிங் பாடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைத் தேர்வுசெய்து பயிற்சி பெறலாம். ஒவ்வொன்றுக்குமான விளக்க வீடியோவும் இருக்கிறது. டைப்பிங் செய்யும் வேகத்தில் ஏற்படும் முன்னேற்றத்தையும் இதில் அறிந்துகொள்ளலாம். இணையதள முகவரி; https://www.typingclub.com/ Read More »

யூடியூப்பில் புதிய வசதி

யூடியூப்பின் தாய் நிறுவனமான கூகுள், டிஜிட்டல் நல சேவையை அறிமுகம்செய்துள்ளது. இதன்படி, செயலிகள் போன்றவற்றில் அதிக நேரம் செலவிட்டால் அது பற்றி பயனாளிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்படும். மே மாதம் முதல் இந்த வசதி அறிமுகமானது. இதன் தொடர்ச்சியாகத் தற்போது, யூடியூப் பயனாளிகள் வீடியோ பார்க்கச் செலவிடும் நேரத்தை அறிந்துகொள்வதற்கான வசதியும் அறிமுகம் ஆகியுள்ளது. யூடியூப் கணக்குப் பக்கத்தில், வீடியோ பயன்பாடு பற்றிய விவரத்தை அறியலாம். இதற்கேற்ப யூடியூப்பில் செலவிடும் நேரத்தைக் கட்டுப்படுத்திக்கொள்ளலாம். இதற்கான நினைவூட்டல் கெடுவையும் அமைத்துக்கொள்ளலாம். குறிப்பிட்ட நேரம் நெருங்கியதும், வீடியோ பார்த்தது ... Read More »

பிகல்லியோடு (Pically) உங்கள் நாள்காட்டியை உருவாக்குங்கள்

புகைப்படங்கள் முடிவுற்ற காலத்தின் நினைவுகளைக் குறிக்கின்றன. நாள்காட்டி வருங்காலத்தைக் குறிக்கும். இவ்வாறு வெவ்வேறு காலங்களில் அடைபட்டுக் கிடக்கும் இரண்டையும் ஒருங்கிணைக்கும் பாலமாக விளங்குவது தான் பிகல்லி (Pically). உங்களுக்கு மிகவும் பிடித்த புகைப்படங்களை ஒவ்வொரு மாதங்களுக்கும் தேர்வு செய்து, விடுமுறை மற்றும் சுபதினங்கள் ஆகியவற்றைச் சேர்த்து, ஒரு நாள்காட்டியாக உருவாக்கி தொங்க விடலாம். இதுவரை நடந்த நிகழ்வுகளை நினைவு கூறுவதாகவும், வருங்கால கனவுகளைக் கண்முன் கொண்டு வருவதாகவும் அது அமையும். இது ஜாவா நிரல் மொழியால் உருவாக்கப்பட்ட செயலியாதலால், இதை லினக்ஸ், விண்டோஸ் மற்றும் ... Read More »

அமேசான் இணையச்சேவைகள் – நேட் நுழைவாயில்கள்

தனிப்பட்ட துணைஇணையங்களிலுள்ள மேகக்கணினிகளுக்கு இணைய இணைப்பை வழங்குவதற்கு நேட் நுழைவாயில்கள் உதவுகின்றன. இணைய இணைப்பு கிடைத்துவிட்டால், பொதுத் துணைஇணையத்திற்கும் தனிப்பட்ட துணைஇணையத்திற்கும் வேறுபாடு இல்லாமல் போய்விடாதா? இணையத்திலிருக்கும் எவராலும், தனிப்பட்ட துணைஇணையத்தை நேட் நுழைவாயில் வழியாக அணுகமுடியுமா? இவற்றுக்கு விடைகாண்பதற்கு நேட் என்றால் என்னவென்று அறிந்துகொள்வது அவசியம். இணையமுகவரி மாற்றம் – Network Address Translation (NAT) சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால், நேட் என்பது இடைத்தரகர் போல. தனிப்பட்ட துணைஇணையத்திலிருக்கும் மேகக்கணினியிலிருந்து துவங்கப்படும் இணையப் போக்குவரத்து, நேட் சாதனங்கள் வழியாகச் செல்லும்போது, அப்போக்குவரத்தின் மூலமுகவரி மாற்றப்படுகிறது. ... Read More »

லாம்டா உருவக்கம் – செயல்முறை

அமேசான் வலைத்தளத்திலிருந்து மூன்று வழிகளில் லாம்டாவை உருவாக்கலாம். சொந்தமாக எழுதலாம். வடிவச்சிலிருந்து (template) உருவாக்கலாம். மறைசேவையகக் களஞ்சியத்திலிருந்து (serverless application repository) பயன்படுத்தலாம். சுருக்கமாகவும், எளிமையாகவும் லாம்டா உருவாக்கத்தைப் புரிந்துகொள்வதற்காக, நுண்சேவைக்கான (Microservices) வடிவச்சிலிருந்து ஒரு லாம்டாவை உருவாக்கி, பரிசோதித்துப் பார்க்கலாம். நுண்சேவைகள் உருவாக்கத்தில், ஒரு பொருளை உருவாக்குவதும் (Create), பெறுவதும் (Read), இற்றைப்படுத்துவதும் (Update), அழிப்பதும் (Delete) அடிப்படையான தேவையாகும். இதனை ஆங்கிலத்தில் CRUD operation என அழைக்கிறோம். ஒரு HTTP கோரிக்கையை உள்ளீடாக ஏற்று, அக்கோரிக்கையின் வகையைப் பொருத்து, அதன் செயல் ... Read More »

கணினியை திட்டமிட்டு பணிநிறுத்தம் செய்யும் QShutDown

QShutDown “Qshutdown” இது திறந்தமூல மென்பொருளாகும். இந்த மென்பொருளானது லினக்ஸ் கணினியை திட்டமிட்டு(Schedule) குறிப்பிட நேரத்தில் பணிநிறுத்தம்(Shutdown) செய்யவோ, Restartசெய்யவோ, இடைநிறுத்தம்(Suspension) அல்லது உறங்க(Hibernation) செய்யவோ உதவுகின்றது. இது ஒரு நாளில் கணினியை திட்டமிட்டு பணிநிறுத்தம் செய்வது மட்டுமல்லாமல் ஒரு நாள்காட்டியின் உதவியுடன் குறிப்பிட்ட தேதி மற்றும் குறிப்பிட்ட நேரத்தில் கணினியை பணிநிறுத்தம் செய்யவும் இந்த மென்பொருள் விருப்பத்தை வழங்குகிறது. தானியக்கமுறையில் குறிப்பிட்ட நேரத்தில் கணினியை பணிநிறுத்தம் செய்ய விரும்பும் பயனர்களுக்கு இந்த மென்பொருளானது மிகவும் உதவியாக இருக்கும், மற்றும் மின்சாரத்தையும் சேமிக்க உதவும். ... Read More »

லினக்ஸ் இயக்கமுறையில் எளிய திரைக்காட்சி பதிவுசெய்தல் (Simple Screen Recorder(SSR)) எனும் பயன்பாடு

சுயமாக தொழில்நுட்பங்களை கற்றறிந்து கொள்வதற்காக திரைக்காட்சியை பதிவுசெய்தல் (ScreenCast) என்பது மிகமுக்கியமான செயலாகும். அதாவது திரையில் தோன்றிடும் காட்சியை படமாக்கப்பட்டு பின்னர் காணொளி காட்சியாக காண்பிப்பதற்காக கோப்பு உருமாற்றம் செய்யப்படவேண்டும். பெரும்பாலும் இவ்வாறான செயலை செய்வதற்காக தனியுடமை மென்பொருட்களே ஏராளமான வகையில் உள்ளன. நல்ல தரமான காணொளி காட்சிகளாக தரும் கோப்புகளை உருவாக்குவதில் கட்டற்ற மென்பொருட்கள் அரிதாக உள்ளன. அதனை தீர்வு செய்வதற்காகவே இந்த எளிய திரைக்காட்சி பதிவுசெய்தல் (Simple Screen Recorder(SSR)) எனும் கட்டற்ற பயன்பாடு லினக்ஸ் இயக்க முறைமையில் செயல்படுவதற்காகவே வெளியிடபட்டுள்ளது. ... Read More »

கணக்கு பதிவியலிற்கான குனுகதா கட்டற்ற கட்டணமற்ற பயன்பாடு

குனுகதா (GNUKhata) என்பது கட்டற்ற கட்டணமற்ற நெகிழ்வுத் தன்மையுடன் கூடிய டேலி (Tally) பயன்பாட்டிற்கு மாற்றான ஒரு கணக்கு பதிவியல் பயன்பாடாகும். இது கணக்கு பதிவியலுடன் கையிருப்பு பொருட்களையும் பராமரித்திடும் ஒரு சிறந்த பயன்பாடாகவும் விளங்குகின்றது. இதனுடைய குனுகதா v5.10 எனும் பதிப்பை மும்பையிலுள்ள Digital Freedom Foundation எனும் நிறுவனம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வெளியிட்டுள்ளது. இதில் பேரேடு, இறுதிக் கையிருப்பு, இருப்புநிலைக் குறிப்பு, இலாபநட்டக் கணக்கு ஆகிய அறிக்கைகளை மாதவாரியாக, காலாண்டு வாரியாக, ஆண்டு வாரியாகப் பெறமுடியும். இதில் பொருட்களுக்கும், அளிக்கும் சேவைகளுக்கும் என தனித்தனியே விலைப்பட்டியலைத் ... Read More »

எஃப்-டிராய்டு (F-Droid) திறந்த மூல செயலிகள் மட்டுமே கொண்ட அங்காடி

பாமர மக்கள் தகவல் தொழில்நுட்பத்தில் வல்லுனர்களாக உடனடியாக ஆக முடியாது. இதற்குத் தீர்வு என்ன? பாதுகாப்பான செயலிகளை யாராவது ஓரிடத்தில் சேர்த்து வைத்திருந்தால் வசதியாக இருக்குமல்லவா? வைத்திருக்கிறார்கள், அதுதான் எஃப்-டிராய்டு (F-Droid) திறந்த மூல செயலிகள் மட்டுமே கொண்ட அங்காடி. இது இலாப நோக்கமற்ற தன்னார்வ திட்டம். இவர்கள் எவ்வளவு எச்சரிக்கையானவர்கள் என்றால், கூடியவரை மூல நிரலை வாங்கி பாதுகாப்பு அல்லது அகவுரிமை பிரச்சினைகள் உள்ளதா என்று சோதனை செய்து பின்னர் தாங்களே இருமமாக்குகிறார்கள். எஃப்-டிராய்டு அங்காடி கூகிள் விளையாட்டு அங்காடியில் கிடையாது. எஃப்-டிராய்டு ... Read More »

Twistclock எனும் கட்டற்ற மேககணினியின் புதிய தேடுதல் கருவி ஒருஅறிமுகம்

இந்த Twistclock எனும் கட்டற்ற மேககணினியின் புதிய தேடுதல் கருவியானது Docker Registries, Kubernetes API சேவையாளர்கள், தரமற்றஅமைவுகளுடன் இருப்பவை அல்லது authenticatio என்பன போன்ற மேககணினி சூழலின் உள்கட்டமைவுகளை பயன்பாடுகளை தேடிக்கண்டறிவதற்காக பயன்படுகின்றது அமோஸானின் இணையசேவை, மைக்ரோசாப்ட்டின் அஜூர் ,கூகுளின் மேககணினிதளம் ஆகியவற்றை ஆதரிக்குமாறு இந்த முதல் வெளியீடானது அமைந்துள்ளது 1 மேககணினி தேடுதலானது நிறுவனத்தின் உள்கட்டமைவுகள் , இயக்கங்கள் பாதுகாப்பு குழுக்களின் திறன் ஆகியவற்றை கொண்டு மேககணினியின் அளவு சூழ்நிலை ஆகியவற்றை அறிந்து கொள்ளுதவுகின்றது பல்வேறு வழங்குநர்களின் முகப்புதிரைக்குள் உள்நுழைவுசெய்திடாமலும் பல்வேறு பக்கங்களை சொடுக்குதலின் வாயிலாக அங்கு செல்லாமலும் நாமேமுயன்று தரவுகளை பதிவேற்றம் செய்திடாமலும் தெரியாத தெரியாத அனைத்தையும் ... Read More »