Author Archives: ict news

அறிவியல்ஆய்விற்குதவிடும்Bio-Linuxஎனும்நிலையான கையடக்க இயக்க முறைமை

genomic, proteomic, metabolomic என்பனபோன்ற சுற்றுசூழலின் ஆய்வகபணிகளுக்கும் மில்லியன் கணக்கான உயிரணுக்களின் தகவல்களை அலசி ஆய்வுசெய்வதற்கான உ.யிர்தொழில்நுட்ப ஆய்வக பணிகளுக்கும் பயன்படுமாறு வெளியிடபட்டிருப்பதுதான் Bio-Linux எனும் கட்டற்ற இயக்க முறைமையாகும் இது உபுண்டு 14.04 LTS எனும் லினக்ஸ்இயக்கமுறைமையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு Bio-Linux 8 எனும் நிலையான பதிப்பில் வெளியிடபட்டதொரு கைடக்க இயக்க முறைமையாகும் இதில் உயிர்தொழில்நுட்ப ஆய்விற்கு உதவிடும்250 இற்கு அதிகமான முன்கூட்டியே நிறுவுகை செய்யப்பட்ட பல்வேறு பயன்பாடுகள் நாம் பயன்படுத்தி கொள்ள தயாராக இருக்கின்றன இதனை பதிவிறக்கம்செய்து பயன்படுத்தி கொள்வதற்காக environmentalomics.org/bio-linux-download/ எனும் இணையபக்கத்திற்கு செல்க இதனை கணினியில் நிறுவுகை செய்துதான் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடு எதுவுமில்லாமல் நம்முடைய கைவசமுள்ள CD/DVD அல்லதுUSBஆகியவற்றிலிருந்து ... Read More »

அரசு ஊழியர்களுக்கு அறிமுகமாகிறது இணையதள கல்வி

அரசு ஊழியர்களுக்கு, இணையதளம் மூலமாக, கணினி பயிற்சி வழங்குவதற்கான பாடத் திட்டத்தை அரசு தயார் செய்துள்ளது. கணினி தொடர்பான, அடிப்படை பயிற்சி மற்றும் அரசு அலுவலகங்களை கணினி மயமாக்கல் குறித்த பயிற்சி, அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்படுகிறது. இப்பயிற்சிகளை அன்றாட அலுவலக பணியில், பயன்படுத்த வேண்டும். இதற்கு, போதியளவு வாய்ப்பு இல்லாததால், கணினி தொடர்பான பயிற்சிகள் முழுமையான பயன் தருவதில்லை என, அரசு நடத்தியுள்ள ஆய்வில் தெரிய வந்துள்ளது. எனவே, பயிற்சி தொடர்பான பாடங்களை, ஆன்-லைனில்  சேர்த்து விட்டால், எப்போது வேண்டுமானாலும், அந்த விவரங்களை ஊழியர்கள் ... Read More »

மாணவர்களுக்கான வலைத்தளங்கள். . .

தமிழ்நாடு அரசுப்பாடத் திட்டத்தின் கீழ் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு என்று பல வலைத்தளங்கள் உள்ளன. கீழே உள்ள வலைத்தளங்கள்  உபயோகமாக அமையும். பொதுத்தளங்கள் அனைத்துப் பாடங்களுக்குமான குறிப்பேடுகள்,  பவர்பாயின்ட், விடியோ, ஆடியோ ஆகியவை கீழே உள்ள  வலைத்தளத்தில் கிடைக்கின்றன. www.waytosuccess.com www.padasalai.net www.Kalvisolai.com தமிழ் www.tamilpalli.wordpress.com www.tamilasiriyarthanjavur.blogspot.com www.ttkazhagam.com இவ்வலைப் பூவில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ்ப்பாடத் திட்டம், வினாத்தாள் அமைப்பு, கற்றல் குறைவான மாணவர்களுக்கான  வினா-வங்கி, ஒருமதிப்பெண் கேள்விகள் ஆகியவை இடம் பெறுகிறது. பாடம் தொடர்பான கால்குலேட்டர், பவர்பாயின்ட், வீடியோ, ஆடியோவும்  ... Read More »

படிப்புக்குப் பயன்படும் இணையதளங்கள்

உயர்கல்வியைத் தேர்வு செய்ய… www.studyguideindia.com இந்தியா முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கலை அறிவியல் கல்லூரிகள், மேலாண்மைக் கல்லூரிகள், சட்டப்பள்ளிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள், ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரிகள், பெண்களுக்கான கல்வி நிலையங்கள், தொலைதூரக் கல்வி வழங்கும் நிறுவனங்கள், டிப்ளமோ, சான்றிதழ் பயிற்சிகளை வழங்கும் நிறுவனங்கள் எனக் கல்வி நிறுவனங்களைப் பற்றிய முழுத் தகவல்களையும் தொகுத்து வழங்குகிறது இந்த இணையதளம். இந்தியா முழுவதும் வழங்கப்படும் இளங்கலை, முதுகலை, டிப்ளமோ படிப்புகள், அந்தப் படிப்புகளில் அடங்கியுள்ள பாடங்கள், எந்தெந்த கல்வி நிறுவனங்களில் அந்தப் படிப்புகள் ... Read More »

SCHOLARSHIP பெற உதவும் WEBSITES

கல்விச்செலவை ஈடுகட்ட பெரிதும் உதவியாக இருப்பது உதவித்தொகைகள் தான். மத்திய, மாநில அரசுகள், தனியார் அமைப்புகள், நிறுவனங்கள் மாணவர்களுக்கு ஏராளமான உதவித்தொகைகளை வழங்கி வருகின்றன. ஆனால், அது எல்லோருக்கும் கிடைப்பதில்லை. ஏன்..? அப்படியான உதவித்தொகைகள் வழங்கப்படுவதைக் கூட பல மாணவர்கள் அறிவதில்லை. அப்படியான மாணவர்களுக்காகவே இந்த இணையதளங்கள். இந்த இணையதளங்களில் பள்ளிக்கல்வி முதல் வெளிநாட்டுப் படிப்பு வரை வழங்கப்படும் உதவித்தொகைகள் பற்றி அறியலாம். www.education.nic.in மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும் இணையதளம் இது. இத்தளத்தில்  பள்ளிக்கல்வி மற்றும் உயர் கல்வித் துறை தொடர்பான ... Read More »

தமிழர்களை இணைக்கும் தமிழ்மொழி இணையம்

உலகெங்கும் உள்ள கோடிக்கணக்கான கணினிகளை ஒருங்கிணைக்கும் ஒரு முறையை இணையம் என்கிறார்கள். ஒரு கட்டடத்திற்குள் இருக்கும் கணினிகள் இணைப்பு (ஈதர்நெட் – அட்டை) – குறும்பரப்பு வலைப்பின்னல் (LAN – Local Area Network)குறிப்பிட்ட பகுதிக்குள் உள்ள குறும்பரப்பு வலைப்பின்னல்கள் இணைப்பு – அகன்ற பரப்பு வலைப்பின்னல் (WAN – Wide Area Network) இந்த இரண்டு வலைப்பின்னல்கள் இணைப்பு – அடக்கப்பட்ட வலைப்பின்னல் – இணையம் (Internet) தொடக்கம் இணையத்தின் தொடக்கம் 1960 ஆம் ஆண்டு அமெரிக்கப் பாதுகாப்புத்துறை குழுவினரின் முன்னோடி ஆய்வுத் ... Read More »

PDF என்பது என்ன?

இப்போது வரும் பெரும்பாலான மென்நூல்கள்,மென்ப்பொருள் கையேடுகள் PDF கோப்புகளாக வருகிறது. PDF என்பது Portable Document Format என்பதன் சுருக்கம் ஆகும்.இதன் சிறப்பு என்னவென்றால் இந்த கோப்பில் உள்ள வாக்கியங்களை எந்த கணினியிலிருந்து படிக்கமுடியும்.அதற்கு தேவை PDF reader என்ற மென்பொருள் இருந்தால் போதும்.இது இலவசமாகவே கிடைக்கிறது. PDF -ன் அவசியம் என்ன? நமது கணினியில் தமிழில் ஒரு எழுத்துருவை பயன்படுத்தி ஒரு ஃபைலை உருவாக்குவோம்.அதே ஃபைலை மற்றொரு கணினியில் படிப்பதற்காக திறந்தால் சதுர வடிவமாக எழுத்துக்கள் படிக்க முடியாதவாறு இருக்கும். இந்த கணினியில் ... Read More »

பாஸ்வேர்டுக்கும் ஒரு சட்டம்!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கொண்டு வரப்பட உள்ள புதிய சட்டம் ஊகிக்கக்கூடிய பாஸ்வேர்டுக்குத் தடை போடுவதாக அமைந்துள்ளது. தகவல் தனியுரிமைச் சட்டப்படி உற்பத்தி நிறுவனங்கள் இனி, தங்கள் சாதனங்களில் பலவீனமான பாஸ்வேர்டுகளை அமைக்கக் கூடாது. அதாவது, ஹேக்கர்கள் எளிதில் ஊகித்துவிடக்கூடிய பலவீனமான பாஸ்வேர்டு களை அமைக்காமல், வலுவான பாஸ்வேர்டுகளை உருவாக்க வேண்டும். ‘ரவுட்டர்’ போன்ற சாதனங்களில் டீஃபால்ட்டாக பாஸ்வேர்டுகள் அமைக்கப்படுகின்றன. பொதுவாக, நிறுவனங்கள் அட்மின் அல்லது பாஸ்வேர்டு போன்ற வார்த்தைகளை பாஸ்வேர்டாக அமைத்துத் தருகின்றன. பயனாளிகள் சாதனத்தை வாங்கியதும் இத்தகைய நன்கறியப்பட்ட படு பலவீனமான ... Read More »

தேடல் வரலாற்றை நீக்கலாம்!

இணைய நிறுவனங்கள் தகவல்களைத் திரட்டுவது தொடர்பான சர்ச்சை வலுப்பெற்றுவருகிறது. இந்நிலையில் தேடி இயந்திரமான கூகுள், பயனாளிகள் தங்கள் தேடல் வரலாறுத் தொடர்பான தகவல்களை நீக்குவதை எளிதாக்கி இருக்கிறது. தேடி இயந்திரமான கூகுள், பயனாளிகளின் தேடல் தொடர்பான பல்வேறு தகவல்களைச் சேகரித்து, சேமித்து வைக்கிறது. பயனாளிகளுக்கு ஏற்ற தேடல் முடிவுகளை அளிக்கவும், அவர்கள் தேடல் விருப்பங்களுக்குப் பொருத்தமான விளம்பரங்களை அளிக்கவும் கூகுள் இந்தத் தகவல்களைப் பயன்படுத்துகிறது. அதாவது, ஒருவரின் தேடல் வரலாறு முழுவதையும் கூகுள் சேமித்து வைக்கிறது. தனிப்பட்ட அடையாளங்களோடு இந்தத் தகவல்கள் சேமிக்கப்படுவதில்லை என்று ... Read More »

சார்ட்களை உருவாக்கும் இணையம்

தகவல்களைக் காட்சி வடிவில் எளிதாகப் புரிந்துகொள்ள வழி செய்யும்  ‘இன்போகிராப்’ எனப்படும் தகவல் வரைபடங்களை உருவாக்கிக்கொள்ளும் சேவையை ‘கேன்வா’ உள்ளிட்ட இணையதளங்கள் அளிக்கின்றன. இவற்றின் மூலம் விதவிதமான இன்போகிராப்களை நீங்களே உருவாக்கலாம். இதேபோல, ‘சார்ட்’ எனக் குறிப்பிடப்படும் வரைபடங்களை உருவாக்கிக்கொள்ள ‘சார்டிபை’ (https://chartify.io/) இணையதளம் வழிசெய்கிறது. நாளிதழ்கள், பத்திரிகைகளில் கட்டுரைகளுடன் அல்லது தனியே பார்க்கக்கூடிய பை சார்ட், பார் சார்ட், காலம் சார்ட் போன்ற சார்ட்களை இதன் மூலம் எளிதாக உருவாக்கிக்கொள்ளலாம். எல்லா சார்ட்களுமே டெம்பிளேட் வடிவில் இருக்கின்றன. அவற்றைத் தேர்வுசெய்து, அதில் தகவல்களை ... Read More »