Author Archives: ict news

இனி குழுக்களிலேயே தனி நபருக்கு பதில் மெசேஜ் அனுப்பலாம்: வாட்ஸ் அப்பில் புதிய வசதி

குழுக்களிலேயே அந்தரங்க முறையில், தனி நபருக்கு பதில் மெசேஜ் அனுப்பும் வசதியை வாட்ஸ் அப் அறிமுகப்படுத்தி உள்ளது. ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தப்படும் ‘மெசேஜிங்’ சேவைகளில் பிரபலமானதாகவும், அதிகம் பயன்படுத்தப்படும் சேவையாகவும் இருக்கும் ‘வாட்ஸ் ஆப்’, இணைய உலகின் வெற்றிக்கதைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதன் அடையாளமாகத்தான் கடந்த 2014-ம் ஆண்டில் முன்னணி சமூக வலைதளமான‌ ஃபேஸ்புக் அதை 19 பில்லியன் டாலர் விலை கொடுத்து வாங்கியது. இன்றைக்கு இந்தியாவில் 20 கோடிக்கும் மேலானோர் வாட்ஸ் அப்பைப் பயன்படுத்துகின்றனர். இது, முன்னணிச் செயலிகளில் ஒன்றாக இருப்பதோடு, வீடியோ ... Read More »

இன்ஸ்டாகிராமில் வாய்ஸ் மெசேஜ்!

ஒளிப்படப் பகிர்வு சேவையான இன்ஸ்டாகிராம் பயணர்களுக்கான புதிய வசதிகளைத் தொடர்ந்து அறிமுகம் செய்துவருகிறது. அந்த வரிசையில், வாய்ஸ் மெசேஜ் அனுப்பும் வசதியை இப்போது அறிமுகம் செய்துள்ளது. இன்ஸ்டாகிராம் டைரக்ட் வசதி மூலம் பயனாளிகள் தங்கள் ஃபாலோயர்கள் அல்லது நண்பர்களுக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பலாம். வாட்ஸ் அப் அல்லது ஃபேஸ்புக் மெசஞ்சரில் உள்ளதுபோலவே பயனாளிகள் ஒரு நிமிட ஒலி வடிவச் செய்தியை அனுப்பி வைக்கலாம். இதற்காக இன்ஸ்டாகிராம் செயலியின் லேட்டஸ்ட் வடிவத்தைத் தரவிறக்கம் செய்ய வேண்டும். அதன் பிறகு, இன்ஸ்டாகிராம் உரையாடல் வசதியில் மைக் ஐகானை ... Read More »

தொழில்நுட்பச் செய்தி செயலி

தொழில்நுட்பச் செய்திகளில் ஆர்வம் கொண்டவர்களுக்கான செய்தி வாசிப்பு செயலியாக ‘ஸ்வைப் ஒன் ரீடர்’ அறிமுகம் ஆகியுள்ளது. தொழில்நுட்பச் செய்திகளை அளிக்கும் தளங்களிலிருந்து பல்வேறு தலைப்புகளில் செய்திகளை இந்தச் செயலி தொகுத்து அளிக்கிறது. ரெட்டிட், ஹேக்கர் நியூஸ், பிராடக்ட் ஹண்ட் உள்ளிட்ட தளங்களின் செய்திகளை இந்தச் செயலியில் அணுகலாம். ஆண்ட்ராய்டு போன்களுக்கானது இந்தச் செயலி. Read More »

இணையத்தில் சேர்ந்து படிக்கலாம்

ஆன்லைனில் பலவித பாடத்திட்டங்களைக் கற்று பட்டயச் சான்றிதழ்களைப் பெறலாம். இணைய பாடத்திட்டங்களைப் பட்டியலிடுவதோடு அவற்றை இணைந்து படிப்பதற்கான இணைய நண்பர்களைத் தேடிக்கொள்ளவும் வழிசெய்கிறது ஸ்டேக்ஸ்.கோர்சஸ் (https://stacks.courses/) இணையதளம். இந்தத் தளத்தில் உள்ள தேடல் வசதியைப் பயன்படுத்தி விரும்பிய இணையப் பாடத்திட்டத்தைத் தேர்வு செய்யலாம். அதன் பிறகு அதே பாடத்திட்டத்தைப் பயிலும் நண்பர்களை இதே தளத்தின் மூலமாகக் கண்டறிந்து அவர்களோடு இணைந்து பயிலலாம். Read More »

மொபைலை கம்ப்யூட்டரில் கனெக்ட் செய்து மெசேஜ் அனுப்புவது எப்படி?

நம் அனைவரின் ஸ்மார்ட்போனிலும் டெக்ஸ்ட் மெசேஜ் செயலி இருக்கும். வாட்ஸ் ஆப் மற்றும் ஹைக் போன்ற சாட்டிங் செயலிகள் வந்த பின்னர் டெக்ஸ்ட் மெசேஜ் செயலியின் பயன்பாடு குறைந்துவிட்டது. முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.! டெக்ஸ்ட் மெசேஜ் தற்பொழுது டெக்ஸ்ட் மெசேஜ் செயலியில் வங்கி விபரங்கள், ஜோமாட்டோ ஆர்டர் விபரங்கள் போன்ற பயன்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகின்றது. வாட்ஸ் ஆப் போன்ற செயலிகளை விட டெக்ஸ்ட் மெசேஜ் செயலி பாதுகாப்பானது என்பது பலருக்கும் இன்னும் தெரியவில்லை. மெசேஜ் ஃபார் வெப் ... Read More »

ஜிமெயில் அல்லது கூகுள் அக்கவுன்ட் பாஸ்வேர்டு மறந்து விட்டதா?  ரிக்கவர் செய்வது எப்படி?

கூகுள் அக்கவுன்ட் சேவையை பயன்படுத்தும் போது சில சமயங்களில், பாஸ்வேர்டு மறந்து போகும் நிலையை நம்மில் பலரும் எதிர்கொண்டு இருப்போம். ஒரே பாஸ்வேர்டினை ஜிமெயிலுக்கும் செட் செய்திருக்கும் போது நிலமை இன்னும் மோசமாகி விடும். இதைவிட ஹேக்கர்கள் உங்களது கூகுள் அக்கவுன்ட்டை ஹேக் செய்து உங்களது பாஸ்வேர்டை மாற்றியிருப்பின் நிலமை மேலும் மோசமாகி விடும். சிலர் மூன்றாம் தரப்பு செயலிகளை கொண்டு தங்களது பாஸ்வேர்டுகளை ஒரே இடத்தில் சேமித்து வைத்திருப்பர், எனினும் பலர் இவ்வாறு செய்வதில்லை. இவ்வாறு ஆகும் போது, புது பாஸ்வேர்டை பெறுவது ... Read More »

iftt அப்ளிகேஷன்

ஏறக்குறை மற்ற எல்லா அப்ளிகேஷன்களையும் ஒருமித்து சேர்த்து ஒரு கனகம்பீரமான ஒரு அப்ளிகேஷனாக இது திகழ்கிறது. இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி, நியூவார்க் டைம்ஸ் இருந்து செய்திகளை பெறலாம், மக்களுக்கு மெசேஜ் செய்யலாம், சமூக இணையதளத்தில் உலா வரலாம், கூகுள் அசிஸ்டெண்டின் அலெக்ஸா மூலம் எல்லாவற்றை கட்டுப்படுத்தலாம், உங்கள் இருப்பிடத்திற்கு ஏற்ப, சில நிகழ்ச்சிகளையும் நீங்கள் நடத்த முடியும். Read More »

கூகுள் கீப்

இந்த கீப் என்பது ஒரு எளிய நினைவூட்டி, குறிப்பு எடுப்பு அப்ளிகேஷன் ஆகும். இந்த விட்கேட் ஒரு மெல்லிய கோடு உடன் பல்வேறு தேர்வுகளுடன் வருகிறது. இதில் ஒரு குறிப்பு எடுத்தல், நினைவூட்டியை அமைத்தல், பட்டியல் அமைத்தல், ஒரு படத்தை வரைதல், ஒரு படத்தை சேமித்தல் ஆகியவற்றை செய்ய முடியும். ஒரு தேர்வின் மீது நீங்கள் தட்டும் போது, குறிப்பிட்ட பணிக்கு நேராக உங்களை அது அழைத்து செல்கிறது. Read More »

சிறந்த செயல்பாட்டை தரும் 9 ஆண்ட்ராய்டு விட்கேட்ஸ்.!

உங்கள் ஸ்மார்ட்போனின் ஹோம் ஸ்கிரீனை அழகுப்படுத்துபவை தான் விட்கேட்ஸ். அவற்றின் பயன்பாட்டை வைத்து பார்க்கும் போது, அதை வீட்டு அலங்கார பொருட்களாக கூட நினைக்கலாம். ஒவ்வொரு அப்ளிகேஷனுக்கும், ஒரு தனித்தன்மையான விட்கேட் இருக்கும். அவை ஏறக்குறைய உடனே தொடர்பு கொள்ளக் கூடியவையாக இருக்கும். இந்த விட்கேட்டின் விரிவாக்கம், அப்ளிகேஷனுக்கு ஷார்ட்கட்டாக கூட இருக்கின்றன. உங்கள் ஹோம் ஸ்கிரீனுக்கு இவை மேம்பட்ட உணர்வை மட்டும் அளிப்பது இல்லை. மாறாக, உங்கள் பணிகளை செய்து கொள்ளவும், புதிய காரியங்களை அறிந்தவராகவும், சேவைகளைப் பெறவும் இது உதவுகிறது. Read ... Read More »

கூகுள் டையலரின் ஃபுளோட்டிங் பப்புள் அம்சத்தை இயக்குவது எப்படி?

புதிய ஆன்ட்ராய்டு இயங்குதளம் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு அழைப்புகள் திரையின் நடுவே பிளாக் வடிவில் காண்பிக்கப்படுகிறது. இது ஸ்மார்ட்போனில் ஒருவர் பயன்படுத்தும் அனைத்து செயலிகளையும் முடக்கி, புது தகவல்களை காண்பிக்கும். இந்த அம்சம் டையலரின் முந்தைய வெர்ஷன்களை விட மேம்பட்டு இருக்கிறது. எனினும் இந்த அம்சம் நாளடைவில் கோபத்தை தூண்டும் ஒன்றாகவும் இருக்கிறது. கூகுளின் புது டையலர் அம்சம் மூலம் அழைப்புகள் மிதக்கும் பப்புள் போன்று திரையில் தோன்றுவதோடு எவ்வித இடையூறும் ஏற்படுத்துவதில்லை. இதனால் நோட்டிஃபிகேஷன் வரும் போதும் தொடர்ந்து மற்ற செயலிகளை எவ்வித இடையூறும் ... Read More »