Author Archives: ict news

வாட்ஸ்அப் ஐ.ஓ.எஸ். செயலியில் புது க்ரூப் காலிங் பட்டன்

ஐபோன்களுக்கான வாட்ஸ்அப் மெசஞ்சர் செயலியில் க்ரூப் கால்களை மிக எளிமையாக மேற்கொள்ளும் புது வசதி சேர்க்கப்பட்டு இருக்கிறது. ஐபோன் மாடல்களுக்கான வாட்ஸ்அப் மெசஞ்சர் செயலியில் க்ரூப் கால்களை எளிமையாக மேற்கொள்ள புது அப்டேட் வழங்கப்படுகிறது. கடந்த மாதம் வெளியிடப்பட்ட ஐ.ஓ.எஸ். பீட்டா செயலியின் அங்கமாக புது அம்சம் வழங்கப்படுகிறது. இத்துடன் க்ரூப் கால்களை நேரடியாக நியூ கால் ஸ்கிரீனில் (New Call screen) இருந்து மேற்கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது. புது அப்டேட் வாட்ஸ்அப் செயலியில் வாய்ஸ் மெசேஜ்களை தொடர்ச்சியாக பிளே செய்யும் வசதியும் வழங்குகிறது. ... Read More »

ஃபேஸ்புக், ட்விட்டருக்கு டீசர் காட்டிய தமிழர் – சந்தைக்கு வந்த புதிய ஆப்

உலகின் பிரபல சமூக வலைத்தளங்கள் பெரும்பாலும் வெளிநாட்டவரால் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், தமிழனின் முயற்சியில் உருவாகி இருக்கும் சமூக வலைத்தளமாக பிக்சாலைவ் இருக்கிறது. #Pixalive #Apps இணையத்தில் சமூக வலைத்தளம் என்றாலே நம் நினைவுக்கு வருவது ஃபேஸ்புக், ட்விட்டர் தான். இவை தவிர பல்வேறு இதர சேவைகள் இருந்தாலும் இந்த சேவைகள் பெரும்பாலும் வெளிநாட்டு நிறுவனங்களால் நடத்தப்படுகின்றன. மேலும் இவ்வாறு பிரபலமாக இருக்கும் சமூக வலைத்தளங்கள் பலவும் ஒரே மாதிரியான அம்சங்களை வழங்குகின்றன. அந்த வகையில் சமூக வலைதள சேவையில் புது அம்சங்களுடன் களம் இறங்கியிருக்கும் ... Read More »

Google யின் Whare Is My Train’ ஆப், வாருங்கள் தெரிந்து கொள்ளலாம் இது நமக்கு எப்படி பயன்படும்..!

Google இந்தியாவில் முதல் கையகப்படுத்தல் செய்துள்ளது. பெங்களூரை அடிப்படையாகக் கொண்ட கூகுள் அறிமுகத்தை அறிவோம், Where Is My Train ஆப் கொண்டு வந்துள்ளது. இந்த ஆப் யின் மூலம் ரெயில் பற்றிய அனைத்து தகவலும் உங்களுக்கு கிடைக்கும். இந்த ஆப்க்கு இன்டர்நெட் மற்றும் GPS தேவையில்லை. உங்களுக்கு இதில் இதில் தெரியப்படுத்துவது என்னவென்றால் ஒரு போஸ்டரில் வேர் இஸ் மை ட்ரைன் (Where Is My Train ) Sigmoid Labs Team யில் இப்படி எழுதப்பட்டு இருந்தது இதனுடன் இதில் கூகுள் ... Read More »

பயன்பாடு புதிது: தலைகீழ் எழுத்து

மைக்ரோசாப்டின் வேர்டு பலரும் பயன்படுத்தும் பிரபலமான மென்பொருள்தான். இந்தக் கோப்பில் பலவிதமான அம்சங்களும் இருக்கின்றன. இவற்றில் எழுத்துகளைத் தலைகீழ் வடிவமாகப் பயன்படுத்துவது அல்லது கண்ணாடியில் பார்ப்பதுபோல ரிவர்சாகத் தோன்றும் வகையில் அமைக்கும் அம்சங்கள் உண்டு. இந்த வகையில் எழுத்துகளை உருவாக்க, டூல் பாக்ஸுக்குச் சென்று, இன்சர்ட் டெக்ஸ் பாக்ஸை கிளிக் செய்து அதில் குறிப்பிட்ட வார்த்தையை டைப் செய்து, ஃபார்மட் ஷேப் எனும் அம்சத்தைத் தேர்வுசெய்து, எபெக்ட்ஸ் எனும் வாய்ப்பு மூலம் 3டி ரொட்டேஷன் அம்சத்தை நாட வேண்டும். அதில் பொருத்தமான கோணத்தைத் தேர்வு ... Read More »

வீடியோ புதிது: ஒரு சொல்லின் வரலாறு

ஆங்கிலத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் வார்த்தைகளில் ஒன்றாக ஓ.கே. இருக்கிறது. ஆங்கிலம் அறியாதவர்கள்கூட, இந்த வார்த்தையைச் சரளமாகப் பயன்படுத்துகிறார்கள். அனுமதி அல்லது உடன்படுவதைக் குறிக்கும் இந்த வார்த்தை எங்கிருந்து எப்படி உருவாகி வந்தது எனத் தெரியுமா? தொடக்கத்தில் வார்த்தைகளைத் தவறாகச் சுருக்குவதன் விளைவாக உருவான இந்த வார்த்தை, தந்தி பிரபலமானபோது வெகுஜனப் புழக்கத்துக்கு வந்ததாகக் கருதப்படுகிறது. இதுபோன்ற தகவல்களோடு ஓ.கே. வார்த்தையைச் சுவைபட விவரிக்கிறது வாக்ஸ் இணையதளம் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள நாம் ஏன் ஓ.கே. சொல்கிறோம் எனும் வீடியோ. Read More »

இணையம் புதிது: இணையத்தில் டைரி எழுதலாம்!

நீங்கள் கடந்த மாதம் என்ன செய்தீர்கள்? கடந்த வாரம் என்ன செய்தீர்கள்? உங்கள் வாழ்க்கையில் என்ன நடந்தது? இதையெல்லாம் நினைவில் வைத்துக்கொள்ள உதவுகிறது டேபில்.மி இணையதளம். இது ஓர் இணைய டைரி சேவை. இதில் உங்களுக்கான பக்கத்தை உருவாக்கி, டைரி குறிப்புகளை எழுதிச் சேமித்து வைக்கலாம். இதில் உறுப்பினராகச் சேருவதும் எளிது. தொடர்ந்து டைரி எழுதிப் பராமரிப்பதும் எளிது. நினைவூட்டல் சேவையாகவும் பயன்படுத்தலாம். இமெயிலுடனான ஒருங்கிணைப்பு, ஹாஷ்டேக் வசதி, பதில் அளிக்கும் அம்சம் என பல்வேறு அம்சங்கள் இதில் உள்ளன. இணைய முகவரி: https://dabble.me/ Read More »

தொழில்நுட்பம் புதிது: இருண்ட வலை!

‘டார்க் வெப்’ எனக் குறிப்பிடப்படும் ‘இருண்ட வலை’ பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். வழக்கமாக நாம் அணுகும் இணையத்தின் பின்னே மறைந்திருக்கும், தேடு இயந்திரங்களால் அணுக முடியாத ஆழ் வலையின் ஒரு அங்கமாக இது கருதப்படுகிறது. இந்த வலையிலிருக்கும் தளங்களை அணுகப் பிரத்யேகமான பிரவுசர்கள், மென்பொருள்கள் தேவை. ஹேக்கர்கள் புழங்கும் இடமாகவும் இது அறியப்படுகிறது. ஆனால், ஆழ் வலை என்று வரும்போது அதில் மேலும் பல சங்கதிகள் இருக்கின்றன. ஆழ் வலை நாமறிந்த வைய விரிவு வலையைவிட 400 அல்லது 500 மடங்கு பெரியதாக இருக்கலாம். ... Read More »

செயலி புதிது: தென்னக ரயில் செயலி

ரயில்களின் பயண நேரம், பயணச்சீட்டு களின் நிலை உள்ளிட்ட தகவல்களை அறிய வழி செய்யும் செயலிகள் பல இருக்கின்றன. ஆனால், இவற்றின்  தகவல்கள் அதிகாரபூர்வ மானவை அல்ல. இந்நிலையில் தென்னக ரயில்வே சார்பில் ரயில் பயணிகளுக்கான செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ‘ரயில் பார்ட்னர்’ எனும் பெயரிலான இந்தச் செயலி, ரயில்வே துறை வழங்கும் பல்வேறு சேவைகள் தொடர்பான தகவல்களை எளிதாக அறிந்துகொள்ளும் வகையில் அமைந்துள்ளது. சென்னை புறநகர் ரயில் தகவல்கள், பயணச்சீட்டு முன்பதிவுத் தகவல்கள் உள்ளிட்ட தகவல்களை இந்தச் செயலி மூலம் அறியலாம். இந்தச் ... Read More »

தொழில்நுட்பம் புதிது: சோர்வைக் கண்டறியலாம்

மனச்சோர்வு தொடர்பான புள்ளி விவரங்கள் உண்மையிலேயே சோர்வு அளிக்கக்கூடியவை. உலக சுகாதார அமைப்பின் தகவல்படி ஆண்டுதோறும் 30 கோடி பேர் மனச்சோர்வால் பாதிக்கப்படுகின்றனர். ஆண்டுதோறும் 8 லட்சம் பேர் மனச்சோர்வால் தற்கொலை செய்துகொள்கிறார்கள். மனச்சோர்வுக்கான அறிகுறிகள் மாறுபட்டவையாக அமைகின்றன. இதனால் மனச்சோர்வைக் கண்டறிவதும் சிக்கலாகவே உள்ளது. இந்தப் பின்னணியில்தான், அமெரிக்காவின் எம்.ஐ.டி. பல்கலைக்கழக ஆய்வாளர்கள் செயற்கை நுண்ணறிவு நுட்பத்தைக் கொண்டு மனச்சோர்வைக் கண்டறிவதற்கான வழியை உருவாக்கியுள்ளனர். நரம்பு மண்டல வலைப்பின்னல் மாதிரியை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவு அமைப்பு, மனிதப் பேச்சில் உள்ள அம்சங்களை ... Read More »

தளம் புதிது: சார்ட்களை உருவாக்கும் இணையம்

தகவல்களைக் காட்சி வடிவில் எளிதாகப் புரிந்துகொள்ள வழி செய்யும்  ‘இன்போகிராப்’ எனப்படும் தகவல் வரைபடங்களை உருவாக்கிக்கொள்ளும் சேவையை ‘கேன்வா’ உள்ளிட்ட இணையதளங்கள் அளிக்கின்றன. இவற்றின் மூலம் விதவிதமான இன்போகிராப்களை நீங்களே உருவாக்கலாம். இதேபோல, ‘சார்ட்’ எனக் குறிப்பிடப்படும் வரைபடங்களை உருவாக்கிக்கொள்ள ‘சார்டிபை’ (https://chartify.io/) இணையதளம் வழிசெய்கிறது. நாளிதழ்கள், பத்திரிகைகளில் கட்டுரைகளுடன் அல்லது தனியே பார்க்கக்கூடிய பை சார்ட், பார் சார்ட், காலம் சார்ட் போன்ற சார்ட்களை இதன் மூலம் எளிதாக உருவாக்கிக்கொள்ளலாம். எல்லா சார்ட்களுமே டெம்பிளேட் வடிவில் இருக்கின்றன. அவற்றைத் தேர்வுசெய்து, அதில் தகவல்களை ... Read More »