தேடல் வரலாற்றை நீக்கலாம்!

இணைய நிறுவனங்கள் தகவல்களைத் திரட்டுவது தொடர்பான சர்ச்சை வலுப்பெற்றுவருகிறது. இந்நிலையில் தேடி இயந்திரமான கூகுள், பயனாளிகள் தங்கள் தேடல் வரலாறுத் தொடர்பான தகவல்களை நீக்குவதை எளிதாக்கி இருக்கிறது.

தேடி இயந்திரமான கூகுள், பயனாளிகளின் தேடல் தொடர்பான பல்வேறு தகவல்களைச் சேகரித்து, சேமித்து வைக்கிறது. பயனாளிகளுக்கு ஏற்ற தேடல் முடிவுகளை அளிக்கவும், அவர்கள் தேடல் விருப்பங்களுக்குப் பொருத்தமான விளம்பரங்களை அளிக்கவும் கூகுள் இந்தத் தகவல்களைப் பயன்படுத்துகிறது. அதாவது, ஒருவரின் தேடல் வரலாறு முழுவதையும் கூகுள் சேமித்து வைக்கிறது. தனிப்பட்ட அடையாளங்களோடு இந்தத் தகவல்கள் சேமிக்கப்படுவதில்லை என்று கூகுள் சொல்கிறது.

மேலும், கூகுள் தன் பங்குக்குத் தங்களைப் பற்றி எந்தவிதமான தகவல் சேகரிக்கப்படுகிறது என்பதை அறிந்து கொள்ளும் வசதியை அளிக்கிறது. அதோடு தேடல் வரலாற்றை நீக்கும் வசதியையும் அளிக்கிறது. ஆனால், இந்த வசதியைக் கண்டுபிடிக்க வேண்டுமானால் கொஞ்சம் மெனக்கெட வேண்டும். கூகுள் கணக்கு பகுதிக்கு உள்ளே சென்று தேடிப்பார்க்க வேண்டும்.

இப்போது இந்த வசதியை மிகவும் எளிதாகக் கண்டறியக்கூடிய வகையில் கூகுள் தனது முகப்பு பக்கத்திலேயே அறிமுகம் செய்வதாகத் தெரிவித்துள்ளது. தனியுரிமை கவலை உள்ளவர்கள், தங்கள் தரவுகளைக் கட்டுப்படுத்துவதில் ஆர்வம் உள்ளவர்கள் இந்த வசதியைப் பயன்படுத்தலாம்.

இது தொடர்பான கூகுளின் வலைப்பதிவுhttps://bit.ly/2JeHIY2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*