PDF என்பது என்ன?

இப்போது வரும் பெரும்பாலான மென்நூல்கள்,மென்ப்பொருள் கையேடுகள் PDF கோப்புகளாக வருகிறது. PDF என்பது Portable Document Format என்பதன் சுருக்கம் ஆகும்.இதன் சிறப்பு என்னவென்றால் இந்த கோப்பில் உள்ள வாக்கியங்களை எந்த கணினியிலிருந்து படிக்கமுடியும்.அதற்கு தேவை PDF reader என்ற மென்பொருள் இருந்தால் போதும்.இது இலவசமாகவே கிடைக்கிறது. PDF -ன் அவசியம் என்ன?நமது கணினியில் தமிழில் ஒரு எழுத்துருவை பயன்படுத்தி ஒரு ஃபைலை உருவாக்குவோம்.அதே ஃபைலை மற்றொரு கணினியில் படிப்பதற்காக திறந்தால் சதுர வடிவமாக எழுத்துக்கள் படிக்க முடியாதவாறு இருக்கும்.இந்த கணினியில் தகுந்த தமிழ் ... Read More »

அறிவியல்ஆய்விற்குதவிடும்Bio-Linuxஎனும்நிலையான கையடக்க இயக்க முறைமை

அறிவியல்ஆய்விற்குதவிடும்Bio-Linuxஎனும்நிலையான கையடக்க இயக்க முறைமை genomic, proteomic, metabolomic என்பனபோன்ற சுற்றுசூழலின் ஆய்வகபணிகளுக்கும் மில்லியன் கணக்கான உயிரணுக்களின் தகவல்களை அலசி ஆய்வுசெய்வதற்கான உ.யிர்தொழில்நுட்ப ஆய்வக பணிகளுக்கும் பயன்படுமாறு வெளியிடபட்டிருப்பதுதான் Bio-Linux எனும் கட்டற்ற இயக்க முறைமையாகும் இது உபுண்டு 14.04 LTS எனும் லினக்ஸ்இயக்கமுறைமையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு Bio-Linux 8 எனும் நிலையான பதிப்பில் வெளியிடபட்டதொரு கைடக்க இயக்க முறைமையாகும் இதில் உயிர்தொழில்நுட்ப ஆய்விற்கு உதவிடும்250 இற்கு அதிகமான முன்கூட்டியே நிறுவுகை செய்யப்பட்ட பல்வேறு பயன்பாடுகள் நாம் பயன்படுத்தி கொள்ள தயாராக இருக்கின்றன இதனை பதிவிறக்கம்செய்து பயன்படுத்தி கொள்வதற்காக environmentalomics.org/bio-linux-download/ எனும் இணையபக்கத்திற்கு செல்க இதனை கணினியில் நிறுவுகை செய்துதான் பயன்படுத்தி கொள்ள ... Read More »

மொபைலை கம்ப்யூட்டரில் கனெக்ட் செய்து மெசேஜ் அனுப்புவது எப்படி?

மொபைலை கம்ப்யூட்டரில் கனெக்ட் செய்து மெசேஜ் அனுப்புவது எப்படி? நம் அனைவரின் ஸ்மார்ட்போனிலும் டெக்ஸ்ட் மெசேஜ் செயலி இருக்கும். வாட்ஸ் ஆப் மற்றும் ஹைக் போன்ற சாட்டிங் செயலிகள் வந்த பின்னர் டெக்ஸ்ட் மெசேஜ் செயலியின் பயன்பாடு குறைந்துவிட்டது. டெக்ஸ்ட் மெசேஜ்தற்பொழுது டெக்ஸ்ட் மெசேஜ் செயலியில் வங்கி விபரங்கள், ஜோமாட்டோ ஆர்டர் விபரங்கள் போன்ற பயன்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகின்றது. வாட்ஸ் ஆப் போன்ற செயலிகளை விட டெக்ஸ்ட் மெசேஜ் செயலி பாதுகாப்பானது என்பது பலருக்கும் இன்னும் தெரியவில்லை. மெசேஜ் ஃபார் வெப் “மெசேஜ் ... Read More »

உங்க கம்ப்யூட்டரில் இரண்டாவது மானிட்டர் இணைக்க மூன்று அற்புத வழிமுறைகள்.!

வியாபார நிறுவனங்கள் மற்றும் வீட்டு கம்ப்யூட்டர்களில் இரண்டு அல்லது அதற்கும் அதிகமான மானிட்டர்களை இணைத்து பயன்படுத்தும் வழிமுறை சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது என்றே கூறலாம். இரண்டு அல்லது அதற்கும் அதிகமான மானிட்டர்களை இணைப்பதன் மூலம் ஒரே சமயத்தில் பல்வேறு மென்பொருள்களை இயக்க முடியும். இதன் மூலம் அடிக்கடி செயலிகளிடையே மாற்ற வேண்டிய நிலை ஏற்படாது. கம்ப்யூட்டரில் பல்வேறு மானிட்டர்களை இணைப்பது அவ்வளவு எளிய வழிமுறை என கூறிவிட முடியாது. சில ப்ளக்களை வைத்துக் கொண்டு மட்டும் இவ்வாறு செய்துவிட முடியாது. கூடுதலாக மானிட்டர்களை ... Read More »

தேர்தல் தகவலுக்கு புதிய செயலி : இனி, விரல் நுனியில், ‘அப்டேட்’

இனி, விரல் நுனியில், ‘அப்டேட்’ தேர்தல் தகவல்களை துல்லியமாக தேடிக் கொடுக்கும், புதிய, ‘மொபைல் ஆப்’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.’ஸ்மார்ட் போன்’ வந்த பிறகு, தேர்தல் கமிஷனும், டிஜிட்டல் உலகத்துக்குள் நுழைந்துவிட்டது.கடந்த இரண்டு ஆண்டுகளாக, ‘ஆன்லைன்’ மூலமாக, வாக்காளர் பட்டியல் தேடுதல், பெயர்களை கண்டறிதல், ஓட்டுச்சாவடி கண்டறிதல் போன்ற சேவைகளை அளித்து வந்தது. சில, ‘மொபைல் ஆப்’களையும், அறிமுகம் செய்திருந்தது.இந்நிலையில், ‘ஓட்டர்ஸ் ஹெல்ப்லைன்’ என்ற பெயரில், புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.மொபைல் போன் மூலமாக, இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொண்டால், ஒட்டுமொத்த தேர்தல் கமிஷன் ... Read More »

எழுத்துருவை அறிய

இணையத்தில் பல வகையான எழுத்துருக்கள் உள்ளன. ஒரு சில எழுத்துருக்கள் எளிமையாகவும் ஈர்ப்புடையதாகவும் இருக்கலாம். இத்தகைய எழுத்துருக்களை நீங்கள் பயன்படுத்த விரும்பலாம். ஆனால், குறிப்பிட்ட அந்த எழுத்துரு தொடர்பான தகவல் தெரிந்தால் மட்டுமே இது சாத்தியம். இதுபோன்ற நேரங்களில் ‘வாட்திபாண்ட்’ செயலி வழிகாட்டுகிறது. எழுத்துருக்களை போன் கேமராவில் படம் எடுத்து, இந்தச் செயலியில் சமர்ப்பித்தால் அந்த எழுத்துருவின் பெயர் என்ன என்பது உள்ளிட்ட தகவல்களை இந்தத் தளம் தெரிவிக்கிறது. வடிவமைப்பாளர்களுக்கும் எழுத்துருக்களை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கும் இந்தச் செயலி பயனுள்ளதாக இருக்கும். மேலும் தகவல்களுக்கு: http://www.myfonts.com/WhatTheFont/mobile/ Read More »

யூடியூப்பில் நேரலை வசதி

யூடியூப் பிரியர்கள் இனி டெஸ்க்டாப்பிலிருந்தே எளிதாக நேரலை செய்யலாம். இதற்கான புதிய வசதி ‘யூடியூப் லைவ்’ மூலம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே, ஸ்மார்ட்போன்களில் செயலி வடிவில் இந்த வசதி உள்ளது. ஆனால், டெஸ்க்டாப் கம்ப்யூட்டரிலிருந்து நேரலை செய்ய வேண்டும் எனில், ‘என்கோடிங்’ மென்பொருளைப் பயன்படுத்த வேண்டும். இந்த நடைமுறையை எளிதாக்கும் வகையில் கம்ப்யூட்டரிலிருந்து வெப்கேம் வழியே நேரலை செய்யும் வசதியை யூடியூப் அறிமுகம் செய்துள்ளது. தவிர, ஸ்மார்ட்போன் செயலிகளிலும் இந்த வசதியில் கூடுதல் அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. போன் கேமராவிலிருந்தும் நேரலை வசதி ... Read More »

நிதி கால்குலேட்டர்

இணையத்தில் பலவிதமான கால்குலேட்டர்களை அணுகலாம். இதற்கென பிரத்யேகமான தளங்கள் இருக்கின்றன. இந்த வரிசையில் இப்போது நிதி விஷயங்களுக்கான கால்குலேட்டராக ‘பைனான்சியல்டூல்பெல்ட்’ (https://www.financialtoolbelt.com/) அறிமுகமாகி இருக்கிறது. இந்தத் தளத்தில் நிதிச் சுதந்திரம் பெறுவதற்குத் தேவையான தொகையைக் கணக்கிடுவது முதல் பகுதி நேரப் பணிக்கான பலனைக் கணக்கிடுவதற்கான கால்குலேட்டர்வரை பலவித சேவைகள் இருக்கின்றன. Read More »

முகவரிகளைப் பகிர புதிய வழி

ஒரே இணைப்பில் ஒன்றுக்கும் மேற்பட்ட பல இணைய முகவரிகளைப் பகிர்ந்துகொள்வதற்கான வசதியை ‘மெனிலிங்க்’ இணையதளம் அறிமுகம் செய்துள்ளது. சமூக ஊடகங்களிலும் இணைய சேவைகளிலும் பல்வேறு நோக்கங்களுக்காக இணைய இணைப்புகளைப் பகிர வேண்டிய தேவை ஏற்படலாம். ஓரிரு முகவரிகள் என்றால் எளிதாகப் பகிர்ந்துவிடலாம். ஆனால், ஒரே நேரத்தில் பல இணைய முகவரிகளைப் பகிர்வது சிக்கல்தான். இதை எளிதாகச் செய்துகொள்ள மெனிலிங்க் இணையதளம் உதவுகிறது. இதில் உறுப்பினராக இணைந்த பிறகு, இணைய முகவரிகளை உள்ளடக்கிய இணைப்பை உருவாக்கி பகிர்ந்துகொள்ளலாம். இணைய முகவரி: https://manylink.co/  Read More »

கோடிங் கற்கலாம் வாங்க!

‘கிராஸ்ஹாப்பர்’ எனும் பெயரில் புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது தேடியந்திரமான கூகுள். ஆண்ட்ராய்டு, ஐபோன்களில் செயல்படும் இந்தச் செயலி மூலம் பயனாளிகள் ‘கோடிங்’ அடிப்படையைக் கற்கலாம். இணையத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் ஜாவா ஸ்கிரிப்ட் உள்ளிட்டவற்றில் ‘கோடிங்’ அடிப்படைகளை மிக எளிதாக கேம்கள் வடிவில் கற்கலாம். ஒவ்வொரு கேமாக விளையாடியபடி, ஒவ்வொரு கட்டமாக முன்னேறலாம். இவற்றில் விநாடி வினாக்களும் அமைந்துள்ளன. தகவல்களுக்கு: https://grasshopper.codes/   Read More »