ரிலாக்ஸுக்கு வழிகாட்டும் கூகுள்

கூகுள் தேடல் வசதியில் பல்வேறு துணை வசதிகள் புதைந்து கிடக்கின்றன. கூகுள் தேடல் வசதியிலேயே இணைய இணைப்பு வேகத்தைப் பரிசோதித்துக்கொள்ளலாம். ஏதேனும் ஒரு எண்ணை உருவாக்கிக்கொள்ளலாம். விலங்குகளின் குரலைக் கேட்கலாம். இப்போது இந்தப் பட்டியலில் மூச்சுப் பயிற்சியையும் சேர்த்துக்கொள்ளலாம். கூகுளில் மூச்சுப் பயிற்சியைப் (deep breathing) பற்றித் தேடினால் பொருத்தமான தேடல் முடிவுகளோடு, ஒரு நிமிட பயிற்சி வழிகாட்டியும் முன் வைக்கப்படுகிறது. நீல நிறத்தில் இந்தக் கையோடு அமைந்துள்ளது. இதைப் பார்த்து ஒரு நிமிடம் மூச்சுப் பயிற்சி செய்து இளைப்பாறலாம். டெஸ்க்டாப் தேடலில் மட்டுமல்லாமல், ... Read More »

வடிவமைப்புக்கான தளம்

வடிவமைப்பு சார்ந்த தகவல்களை அளிக்கும் இணையதளங்களை தெரிந்து கொள்ள விரும்பினால், ‘நீடி.கோ’ (https://neede.co/#/) இணையதளம் வழிகாட்டுகிறது. வடிவமைப்புக்கு தேவையான மென்பொருள்கள், வண்னங்களைத் தேர்வு செய்யும் தளங்கள், ஊக்கம் அளிக்கும் தளங்கள், எழுத்துரு வழிகாட்டிகள் எனப் பலவகையான தளங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இது மிக எளிமையான தளம். இதில் எந்த ஆடம்பர அம்சங்களும் கிடையாது. பயனுள்ள தளங்களின் பட்டியலாக அமைந்துள்ளது. ஹான்சல் வாங் என்பவர் இந்தத் தளத்தை உருவாக்கியுள்ளார். Read More »

மறு அவதாரம் எடுக்கும் ‘வைன்’

இப்போது டிக்டாக்காக மாறியிருக்கும் ‘மியூசிகலி’ செயலி  அறிமுகமாவதற்கு முன்பே இணையத்தில் கலக்கிக்கொண்டிருந்தது ‘வைன்’ (Vine). அமெரிக்காவின் டோம் ஹாப்மன், அவருடைய நண்பர்களால் அறிமுகம் செய்யப்பட்ட வைன், ஆறு நொடி வீடியோக்களை உருவாக்கி பகிர்ந்துகொள்ள வாய்ப்பளித்தது. இந்தச் செயலியிலேயே படம் பிடிக்கும் கேமரா இருந்தது. படம் பிடித்து அதிலேயே ‘எடிட்’ செய்யலாம். இந்த அம்சங்களைச் சாதகமாகப் பயன்படுத்தி, அசத்தலான ஆறு நொடி வீடியோக்களை உருவாக்கி மகிழ்ந்தனர் அதன் பயனாளிகள். குறிப்பாக புதுமையான காமெடி வீடியோக்கள் வைனில் மிகப் பிரபலம். இதற்குக் கிடைத்த வரவேற்பு காரணமாக ‘யாஹு’ ... Read More »

இனி வாட்ஸ் அப் மூலம் ரயில் பயணத்தை லைவ் ஆகத் தெரிந்துகொள்ளலாம், எப்படி?

இந்திய ரயில்வே, தனது பயணங்களை அதிகப் பாதுகாப்பானதாக மாற்ற ஏராளமான முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. முன்னதாக 139 என்ற எண்ணை அழைத்து ரயில் எங்கே வந்துகொண்டிருக்கிறது என்ற தகவலைப் பயணிகள் பெற்றுக்கொண்டிருந்தனர். ஆனால் ஒரே எண்ணை, ஒரே நேரத்தில் ஏராளமானோர் அழைத்ததால், சர்வர் பிரச்சினை ஏற்பட்டு 139-ஐ உடனடியாகத் தொடர்பு கொள்ள முடியாத நிலை இருந்தது.   எப்படி இந்த சேவையைப் பெறுவது? * முதலில் 7349389104 என்ற எண்ணை மொபைலில் சேமித்துக் கொள்ளுங்கள். * வாட்ஸ் அப் செயலிக்குச் செல்லுங்கள். * வாட்ஸ் அப்பில் நீங்கள் ... Read More »

குறிப்பு எழுத அழைக்கும் தளம்

‘கேப்ஷன் கேட்’ (https://caption.cat/posts/10) இணையதளத்தில் தினந்தோறும் ஓர் ஒளிப்படத்தைப் பார்த்து ரசிக்கலாம். அதோடு அந்தப் படத்துக்கான விளக்கக் குறிப்பையும் எழுதிச் சமர்ப்பிக்கலாம். நகைச் சுவையான ஒளிப்படக் குறிப்புகளைச் சமர்ப்பிக்கச் செய்வதுதான் இந்தத் தளத்தின் நோக்கம். ஒளிப்படங்களுக்கான குறிப்புகளுக்கு மற்றவர்கள் வாக்களிப்பார்கள். அதன் அடிப்படையில் குறிப்புகள் வரிசைப்படுத்தப்படும். தினமும் வெளியாகும் ஒளிப்படம் தவிர, பழைய படங்கள், அதிக வாக்குகள் பெற்ற படங்கள் ஆகியவற்றையும் பார்க்கலாம். புதிய ஒளிப்படங்கள் தொடர்பான தகவல்களை மின்னஞ்சல் வாயிலாகப் பெறும் வசதியும் உண்டு. Read More »

ஸ்மார்ட்போனில் அலட்சியம்

ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்தாலும், அவற்றைப் பாதுகாப்பதில் இன்னும் விழிப்புணர்வு தேவை எனும் நிலை இருப்பதைச் சமீபத்திய ஆய்வு ஒன்று உணர்த்துகிறது. வைரஸ் தடுப்பு சேவை வழங்கும் நிறுவனமான, கேஸ்பர்ஸ்கை நிறுவனம் நடத்திய ஆய்வில் ஸ்மார்ட்போன் பயனாளிகளில் பாதிப் பேருக்கு மேல் அவற்றுக்கு பாஸ்வேர்டு பாதுகாப்பைப் பயன்படுத்துவதில்லை என்று தெரிவிக்கிறது. அதேபோல் பெரும்பாலானோர் திருட்டுத் தடுப்பு தீர்வுகளையும் நாடுவதில்லை எனத் தெரிவித்துள்ளது. ஸ்மார்ட்போன் மூலம் இணையத்தை அணுகுவது பரவலாகி இருக்கும் நிலையில், இத்தகைய செயல் தரவுகளின் பாதுகாப்பைக் கேள்விக்குள்ளாக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் பயனாளிகளில் மிகவும் ... Read More »

கூகுள் நியூஸின் புதிய வடிவம்

கூகுள் நிறுவனம் ‘கூகுள் நியூஸ்’ சேவையை வழங்கிவருவது தெரிந்த செய்திதான். அண்மையில் கூகுள் இந்தச் செயலியைப் புதுப்பித்துள்ளது. புதிய வடிவம், பயனுள்ள மாற்றங்களைக் கொண்டிருக்கிறது. செயலியைத் திறந்தும் வரிசையாகச் செய்திகள் தோன்றுகின்றன. விருப்பத்துக்கு ஏற்ப செய்திகளை அமைக்கலாம். புதிய பயனாளிகள் என்றால், இதற்கான தேர்வு வசதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம். செய்தியின் மூல தளங்களும் அடையாளம் காட்டப்படுகின்றன. குறிப்பிட்ட தலைப்பில் பொருத்தமான செய்திகளைத் தேடி கண்டறிவதும் எளிதாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு செய்திக்கான தலைப்பின் கீழே சிவப்பு மற்றும் நீல நிற ஐகான்கள் இருக்கும். அதை கிளிக் செய்தால் தொடர்புடைய ... Read More »

ஸ்கைப்பில் புதிய வசதி

மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்குச் சொந்தமான ஸ்கைப் சேவை இணைய தொலைபேசி வசதியில் பிரபலம். தற்போது இணையத் தொலைபேசி சேவையான ஸ்கைப்பில் குரல் பதிவு வசதி அறிமுகமாகியுள்ளது. உரையாடல்கள் பதிவுசெய்யப்பட்டு கிளவுட்டில் சேமிக்கப்படும். டெஸ்க்டாப், ஸ்மார்ட்போனில் இந்த வசதியைப் பெறலாம். மூன்றாம் தரப்பு செயலிகள் மூலம் இந்த வசதியைப் பெறலாம் என்றாலும் ஸ்கைப் முதன்முறையாக நேரடியாக இந்த வசதியை அறிமுகம் செய்துள்ளது. குரல் பதிவு செய்யப்படுவது பயனாளிகளுக்கு உணர்த்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More »

வீடியோ குறிப்புகள்

யூடியூப் வீடியோக்கள் குறிப்புகளை இணைத்து மேம்பட்ட வடிவில் பகிர்வதற்கான வசதியை ‘டைம்லைன்.லி’ (https://www.timeline.ly/) தளம் வழங்குகிறது. இந்தத் தளத்தில் உள்ள தேடல் கட்டத்தில் யூடியூப் வீடியோ முகவரியைத் தந்தால் அதன் பிறகு அதில் மாற்றங்கள் செய்யலாம். வீடியோவில் குறிப்பிட்ட காட்சி அல்லது இடத்தில் கூடுதல் தகவலை இடம்பெற வைக்க விரும்பினால், அங்கே குறிப்புகளை எளிதாக இணைக்கலாம். படங்கள், வரைப்படங்கள் போன்றவற்றையும் இதில் இணைக்கலாம். குறிப்புகள், இணைப்புகள் சேர்க்கப்பட்ட வீடியோ கோப்பைச் சமூக வலைத்தளங்களிலும் பகிரலாம். டெஸ்க்டாப், மொபைலிலும் பகிரலாம். Read More »

ஒலிக் கோப்புகளுக்கான தளம்

ஒலிக் கோப்புகளைத் தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு ‘சவுண்ட்பைபிள்’ இணைய தளம் உதவுகிறது. எண்ணற்ற ஒலிகளைக் கொண்டுள்ள இந்தத் தளத்தில் விருப்பமான ஒலிக் கோப்புகளைத் தேடிப் பயன்படுத்திக்கொள்ளலாம். எல்லாமே இலவசமாகப் பயன்படுத்தக்கூடிய வகையில் காப்புரிமை விடுபட்ட, பொது காப்புரிமையின் (கிரியேட்டிவ் காமன்ஸ்) கீழ்வரும் ஒலிகள். பவர் பாயிண்ட் காட்சி விளக்கத்தின் இடையே பயன்படுத்தவும் வீடியோ தொகுப்பில் பயன்படுத்தவும் பொருத்தமான ஒலிகள் தேவைப்பட்டால் இந்தத் தளத்தில் தேடிப் பார்க்கலாம். புதிதாகச் சேர்க்கப்படும் ஒலிகள், பிரபலமான ஒலிகள் போன்றவை வரிசையாகப் பட்டியலிடப்பட்டுள்ளன. புதிய ஒலி தேவை எனில் விண்ணப்பித்துக் கேட்கும் வசதியும் ... Read More »