நடனமாடும் ரோபோ

இசைக்கு ஏற்ற வகையில் நடனமாடும் ரோபோவைத் தயாரித்திருக்கிறது டெக்சாஸைச் சேர்ந்த ஏ பிளஸ் ட்ரோன்ஸ் நிறுவனம். ரோபோவின் 2 கால்களிலும் 360 டிகிரி சுழலும் வகையிலான மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளன. டேன்ஸ் பாட் என இந்த ரோபோவுக்கு பெயரிடப்பட்டுள்ளது.   Read More »

மியூசியம் உருவாக்கிய மீம்

இணையம் எங்கும் நிறைந்திருக்கும் மீம்களைக் கேலிக்கும் கிண்டலுக்கும் தான் பயன்படுத்த வேண்டும் என்றில்லை, விழிப்புணர்வு நோக்கிலும் பயன்படுத்தலாம். அதனால்தான், அண்மையில் மியூசியம் காப்பாளர்கள், விதவிதமான மீம்களை உருவாக்கி கலக்கி இருக்கின்றனர். கடந்த 22-ம் தேதி மியூசியம் மீம் தினமாகக் கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, மியூசியக் காப்பாளர்கள், மியூசியத்திலிருக்கும் காட்சிப்பொருட்கள் தொடர்பான மீம்களை உருவாக்கி, #MusMeme எனும் ஹாஷ்டேகுடன் ட்விட்டரில் பகிர்ந்துகொண்டனர். அந்தக் கால கலைப்பொருட்கள் மற்றும் மியூசியத்தில் பார்க்கக்கூடிய பொருட்கள் அருகே இக்கால மீம்கள் பாணியில் வாசகங்களை எழுதி பகிர்ந்துகொண்ட இந்தப் படைப்புகளுக்கு ட்விட்டரில் ... Read More »

இந்தியாவில் ராக்கெட் பிரவுசர்!

‘பயர்பாக்ஸ்’ பிரவுசரை நிர்வகிக்கும் மொசில்லா அமைப்பு, அதன் லேசு ரக மொபைல் பிரவுசரான பயர்பாக்ஸ் ராக்கெட் பிரவுசரை இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கிறது. இணையத்தைப் பயன்படுத்தும்போது டேட்டாவை மிச்சமாக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட இந்த பிரவுசர், கடந்த ஆண்டு இந்தோனேசியாவில் அறிமுகம் ஆனது. அதன் தொடர்ச்சியாகத் தற்போது இந்தியா உள்ளிட்ட நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வழக்கமான பிரவுசரில் உள்ள அதிகம் பயன்படுத்தப்படப்படாத அம்சங்கள் நீக்கப்பட்ட பிரவுசர் இது. இதனால், மெதுவான இணைப்பு கொண்ட இணைய சேவையிலும் இது பக்கங்களை வேகமாகத் தரவிறக்கம் செய்யக்கூடியது. தகவல்களுக்கு: https://support.mozilla.org/en-US/products/firefox-rocket/get-started Read More »

தேடு இயந்திரம் புதிது: வண்ணங்களைத் தேடலாம் வாங்க!

சில நேரங்களில் வண்ணங்களையும் வண்ண சேர்க்கைகளையும் தேடும் தேவை ஏற்படலாம். இதுபோன்ற நேரத்தில் கைகொடுப்பதற்காகப் புதியதொரு தேடு இயந்திரம் அறிமுகம் ஆகியிருக்கிறது. பிக்யூலர் (https://picular.co/) எனும் இந்தத் தேடு இயந்திரத்தில், வண்ணங்களைத் தேடலாம். வழக்கமான தேடு இயந்திரம்போலவே இதிலும் கீவேர்டுகளைச் சமர்ப்பித்துத் தேடலாம். வழக்கமான தேடல் முடிவுகளுக்குப் பதிலாக வண்ண கட்டங்கள் வந்து நிற்கின்றன. மிக எளிமையான வடிவமைப்பில், சிக்கனமாக அமைந்திருக்கும் இந்தத் தேடு இயந்திரத்தைப் பயன்படுத்துவது எளிதானது. Read More »

டைப்பிங் செய்ய உதவும் தளம்

முன்புபோல இப்போது அதிகமானோர் டைப்பிங் வகுப்புக்குச் செல்வதில்லை. பெரும்பாலானோர் கம்ப்யூட்டரிலேயே டைப்பிங் செய்யப் பழகிவிடுகின்றனர். இருப்பினும், டைப்பிங் திறனை அதிகரித்துக்கொள்ளப் பயிற்சி தேவை என நினைத்தால் ‘டைப்பிங்கிளப்’ இணையதளம் அதற்கு உதவுகிறது. இந்தத் தளத்தில் பல்வேறு அளவிலான டைப்பிங் பாடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைத் தேர்வுசெய்து பயிற்சி பெறலாம். ஒவ்வொன்றுக்குமான விளக்க வீடியோவும் இருக்கிறது. டைப்பிங் செய்யும் வேகத்தில் ஏற்படும் முன்னேற்றத்தையும் இதில் அறிந்துகொள்ளலாம். இணையதள முகவரி; https://www.typingclub.com/ Read More »

யூடியூப்பில் புதிய வசதி

யூடியூப்பின் தாய் நிறுவனமான கூகுள், டிஜிட்டல் நல சேவையை அறிமுகம்செய்துள்ளது. இதன்படி, செயலிகள் போன்றவற்றில் அதிக நேரம் செலவிட்டால் அது பற்றி பயனாளிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்படும். மே மாதம் முதல் இந்த வசதி அறிமுகமானது. இதன் தொடர்ச்சியாகத் தற்போது, யூடியூப் பயனாளிகள் வீடியோ பார்க்கச் செலவிடும் நேரத்தை அறிந்துகொள்வதற்கான வசதியும் அறிமுகம் ஆகியுள்ளது. யூடியூப் கணக்குப் பக்கத்தில், வீடியோ பயன்பாடு பற்றிய விவரத்தை அறியலாம். இதற்கேற்ப யூடியூப்பில் செலவிடும் நேரத்தைக் கட்டுப்படுத்திக்கொள்ளலாம். இதற்கான நினைவூட்டல் கெடுவையும் அமைத்துக்கொள்ளலாம். குறிப்பிட்ட நேரம் நெருங்கியதும், வீடியோ பார்த்தது ... Read More »

பிகல்லியோடு (Pically) உங்கள் நாள்காட்டியை உருவாக்குங்கள்

புகைப்படங்கள் முடிவுற்ற காலத்தின் நினைவுகளைக் குறிக்கின்றன. நாள்காட்டி வருங்காலத்தைக் குறிக்கும். இவ்வாறு வெவ்வேறு காலங்களில் அடைபட்டுக் கிடக்கும் இரண்டையும் ஒருங்கிணைக்கும் பாலமாக விளங்குவது தான் பிகல்லி (Pically). உங்களுக்கு மிகவும் பிடித்த புகைப்படங்களை ஒவ்வொரு மாதங்களுக்கும் தேர்வு செய்து, விடுமுறை மற்றும் சுபதினங்கள் ஆகியவற்றைச் சேர்த்து, ஒரு நாள்காட்டியாக உருவாக்கி தொங்க விடலாம். இதுவரை நடந்த நிகழ்வுகளை நினைவு கூறுவதாகவும், வருங்கால கனவுகளைக் கண்முன் கொண்டு வருவதாகவும் அது அமையும். இது ஜாவா நிரல் மொழியால் உருவாக்கப்பட்ட செயலியாதலால், இதை லினக்ஸ், விண்டோஸ் மற்றும் ... Read More »

அமேசான் இணையச்சேவைகள் – நேட் நுழைவாயில்கள்

தனிப்பட்ட துணைஇணையங்களிலுள்ள மேகக்கணினிகளுக்கு இணைய இணைப்பை வழங்குவதற்கு நேட் நுழைவாயில்கள் உதவுகின்றன. இணைய இணைப்பு கிடைத்துவிட்டால், பொதுத் துணைஇணையத்திற்கும் தனிப்பட்ட துணைஇணையத்திற்கும் வேறுபாடு இல்லாமல் போய்விடாதா? இணையத்திலிருக்கும் எவராலும், தனிப்பட்ட துணைஇணையத்தை நேட் நுழைவாயில் வழியாக அணுகமுடியுமா? இவற்றுக்கு விடைகாண்பதற்கு நேட் என்றால் என்னவென்று அறிந்துகொள்வது அவசியம். இணையமுகவரி மாற்றம் – Network Address Translation (NAT) சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால், நேட் என்பது இடைத்தரகர் போல. தனிப்பட்ட துணைஇணையத்திலிருக்கும் மேகக்கணினியிலிருந்து துவங்கப்படும் இணையப் போக்குவரத்து, நேட் சாதனங்கள் வழியாகச் செல்லும்போது, அப்போக்குவரத்தின் மூலமுகவரி மாற்றப்படுகிறது. ... Read More »

லாம்டா உருவக்கம் – செயல்முறை

அமேசான் வலைத்தளத்திலிருந்து மூன்று வழிகளில் லாம்டாவை உருவாக்கலாம். சொந்தமாக எழுதலாம். வடிவச்சிலிருந்து (template) உருவாக்கலாம். மறைசேவையகக் களஞ்சியத்திலிருந்து (serverless application repository) பயன்படுத்தலாம். சுருக்கமாகவும், எளிமையாகவும் லாம்டா உருவாக்கத்தைப் புரிந்துகொள்வதற்காக, நுண்சேவைக்கான (Microservices) வடிவச்சிலிருந்து ஒரு லாம்டாவை உருவாக்கி, பரிசோதித்துப் பார்க்கலாம். நுண்சேவைகள் உருவாக்கத்தில், ஒரு பொருளை உருவாக்குவதும் (Create), பெறுவதும் (Read), இற்றைப்படுத்துவதும் (Update), அழிப்பதும் (Delete) அடிப்படையான தேவையாகும். இதனை ஆங்கிலத்தில் CRUD operation என அழைக்கிறோம். ஒரு HTTP கோரிக்கையை உள்ளீடாக ஏற்று, அக்கோரிக்கையின் வகையைப் பொருத்து, அதன் செயல் ... Read More »

கணினியை திட்டமிட்டு பணிநிறுத்தம் செய்யும் QShutDown

QShutDown “Qshutdown” இது திறந்தமூல மென்பொருளாகும். இந்த மென்பொருளானது லினக்ஸ் கணினியை திட்டமிட்டு(Schedule) குறிப்பிட நேரத்தில் பணிநிறுத்தம்(Shutdown) செய்யவோ, Restartசெய்யவோ, இடைநிறுத்தம்(Suspension) அல்லது உறங்க(Hibernation) செய்யவோ உதவுகின்றது. இது ஒரு நாளில் கணினியை திட்டமிட்டு பணிநிறுத்தம் செய்வது மட்டுமல்லாமல் ஒரு நாள்காட்டியின் உதவியுடன் குறிப்பிட்ட தேதி மற்றும் குறிப்பிட்ட நேரத்தில் கணினியை பணிநிறுத்தம் செய்யவும் இந்த மென்பொருள் விருப்பத்தை வழங்குகிறது. தானியக்கமுறையில் குறிப்பிட்ட நேரத்தில் கணினியை பணிநிறுத்தம் செய்ய விரும்பும் பயனர்களுக்கு இந்த மென்பொருளானது மிகவும் உதவியாக இருக்கும், மற்றும் மின்சாரத்தையும் சேமிக்க உதவும். ... Read More »