Author Archives: ict news

விண்டோஸ் 10 இயங்குதளத்தில் அப்டேட்டினை டிசேபிள் செய்வது எப்படி?

இதற்கு முந்தைய விண்டோஸ் இயங்குதளங்களில் விண்டோஸ் அப்டேட்டினை மிகவும் எளிமையாக டிசேபிள் செய்து கொள்ள முடியும். ஆனால் விண்டோஸ் 10 இயங்குதளத்தில் விண்டோஸ் அப்டேட்டினை டிசேபிள் செய்வது என்பது அவ்வளவு எளிதான செயல் இல்லை. இதற்கு நாம் விண்டோஸ் 10 இயங்குதளத்தில் இரண்டு இடத்தில் மாற்றங்களை செய்ய வேண்டும். 1) முதலில் கம்ப்யூட்டர் மீது வலது கிளிக் செய்து தோன்றும் பாப்அப் விண்டோவில் Manage என்பதை கிளிக் செய்யவும். கிளிக் செய்தவுடன் தோன்றும் விண்டோவில் Services and Applications என்பதை  கிளிக் செய்யவும். அடுத்து Services என்பதை கிளிக் செய்யவும். கிளிக் செய்தவுடன் தோன்றும் ... Read More »

இலவசமாக மின்னஞ்சல் கையெப்பத்தை உருவாக்க

இன்றைய சூழ்நிலையில் அஞ்சலகம் வழியாக தபால் அனுப்பும் முறை குறைந்து குறுஞ்செய்தி (SMS, Webchat), மின்னஞ்சல் (Email) வழியாகவே செய்திகள் பரிமாறிக்கொள்ளப்படுகிறன. தற்போது வெப்சாட் டூல்களான வாட்ஸ்அப், டெலிகிராம், ஹைக் வழியாகவே அதிகமான உரையாடல்கள் பரிமாறிக்கொள்ளப்படுகிறது. என்னதான் இவ்வளவு எளிமையாக உரையாடிக்கொள்ள செயலிகள் (Application) இருந்தாலும் தொழில் முறை சார்ந்த அலுவல்களுக்கு மின்னஞ்சல் வழியாகவே தற்போதும் தகவல்கள் பரிமாறிக்கொள்ளப்படுகிறன. இவ்வாறு அனுப்பும் மின்னஞ்சல்களில் அடிப்பகுதியில் அவரவர்களுடைய கையெப்பம் (Signature) இருக்கும் இந்த கையெப்பங்களை மிக அழகான முறையில் உருவாக்க ஆன்லைனில் சில வலைதளங்கள் வழிவகை ... Read More »

Google Business பக்கத்தை உருவாக்குவது எப்படி?

Google Business பக்கம் என்பது, நாம் கூகுள் தேடுபொறியில் சர்ச் செய்யும் போது முகப்பு பகுதியில் Right Side தோன்றும் விவரங்கள் ஆகும். இது மிக முக்கியமான தகவல்களை கொண்டிருக்கும். உதாரணமாக கூகுள் மேப், வேலை செய்யும் நேரம் மற்றும் முகவரி போன்றவைகள் ஆகும். இந்த Google Business சேவையினை நம்முடைய அலுவலகத்திற்கோ அல்லது வலைதளம்/வலைப்பூவிற்கோ நாம் எவ்வாறு பெறுவது என்று பலருக்கு தெரியாமல் இருக்கலாம் இந்த பதிவு அவர்களுக்கானது. மேலே உள்ள சுட்டியை கிளிக் செய்து Google Business பக்கத்திற்கு செல்லவும். பின் START ... Read More »

ஒரே மொபைலில் இரண்டு வாட்ஸ்அப் கணக்குகள்

நாம் பயன்படுத்தும் அனைத்து மொபைல் போன்களுமே தற்போது இரண்டு சிம் வசதிகளுடன் தான் இருக்கிறது. ஆனால் அதில் பயன்படுத்தும் அப்ளிகேஷன் கணக்குகள் ஒன்று மட்டுமே பயன்படுத்த முடியும். உதாரணமாக பேஸ்புக், வாட்ஸ்அப், யூடுப் போன்றவை ஆகும். இதற்கு தீர்வாக Parallel Space என்னும் ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷன் இருக்கிறது. இந்த அப்ளிகேஷன் மூலமாக நம்முடைய மொபைல் போனில் அப்ளிகேஷன்களை நகலி (Clone) செய்து பயன்படுத்த முடியும். இந்த மென்பொருளை உங்கள் ஆன்ட்ராய்ட் மொபைல் போனில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். அதில் நீங்கள் நகலி ... Read More »

குறிப்பு எழுத அழைக்கும் தளம்

‘கேப்ஷன் கேட்’ (https://caption.cat/posts/10) இணையதளத்தில் தினந்தோறும் ஓர் ஒளிப்படத்தைப் பார்த்து ரசிக்கலாம். அதோடு அந்தப் படத்துக்கான விளக்கக் குறிப்பையும் எழுதிச் சமர்ப்பிக்கலாம். நகைச் சுவையான ஒளிப்படக் குறிப்புகளைச் சமர்ப்பிக்கச் செய்வதுதான் இந்தத் தளத்தின் நோக்கம். ஒளிப்படங்களுக்கான குறிப்புகளுக்கு மற்றவர்கள் வாக்களிப்பார்கள். அதன் அடிப்படையில் குறிப்புகள் வரிசைப்படுத்தப்படும். தினமும் வெளியாகும் ஒளிப்படம் தவிர, பழைய படங்கள், அதிக வாக்குகள் பெற்ற படங்கள் ஆகியவற்றையும் பார்க்கலாம். புதிய ஒளிப்படங்கள் தொடர்பான தகவல்களை மின்னஞ்சல் வாயிலாகப் பெறும் வசதியும் உண்டு. Read More »

கூகுள் நியூஸின் புதிய வடிவம்

கூகுள் நிறுவனம் ‘கூகுள் நியூஸ்’ சேவையை வழங்கிவருவது தெரிந்த செய்திதான். அண்மையில் கூகுள் இந்தச் செயலியைப் புதுப்பித்துள்ளது. புதிய வடிவம், பயனுள்ள மாற்றங்களைக் கொண்டிருக்கிறது. செயலியைத் திறந்தும் வரிசையாகச் செய்திகள் தோன்றுகின்றன. விருப்பத்துக்கு ஏற்ப செய்திகளை அமைக்கலாம். புதிய பயனாளிகள் என்றால், இதற்கான தேர்வு வசதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம். செய்தியின் மூல தளங்களும் அடையாளம் காட்டப்படுகின்றன. குறிப்பிட்ட தலைப்பில் பொருத்தமான செய்திகளைத் தேடி கண்டறிவதும் எளிதாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு செய்திக்கான தலைப்பின் கீழே சிவப்பு மற்றும் நீல நிற ஐகான்கள் இருக்கும். அதை கிளிக் செய்தால் தொடர்புடைய ... Read More »

ரிலாக்ஸுக்கு வழிகாட்டும் கூகுள்

கூகுள் தேடல் வசதியில் பல்வேறு துணை வசதிகள் புதைந்து கிடக்கின்றன. கூகுள் தேடல் வசதியிலேயே இணைய இணைப்பு வேகத்தைப் பரிசோதித்துக்கொள்ளலாம். ஏதேனும் ஒரு எண்ணை உருவாக்கிக்கொள்ளலாம். விலங்குகளின் குரலைக் கேட்கலாம். இப்போது இந்தப் பட்டியலில் மூச்சுப் பயிற்சியையும் சேர்த்துக்கொள்ளலாம். கூகுளில் மூச்சுப் பயிற்சியைப் (deep breathing) பற்றித் தேடினால் பொருத்தமான தேடல் முடிவுகளோடு, ஒரு நிமிட பயிற்சி வழிகாட்டியும் முன் வைக்கப்படுகிறது. நீல நிறத்தில் இந்தக் கையோடு அமைந்துள்ளது. இதைப் பார்த்து ஒரு நிமிடம் மூச்சுப் பயிற்சி செய்து இளைப்பாறலாம். டெஸ்க்டாப் தேடலில் மட்டுமல்லாமல், ... Read More »

வடிவமைப்புக்கான தளம்

வடிவமைப்பு சார்ந்த தகவல்களை அளிக்கும் இணையதளங்களை தெரிந்து கொள்ள விரும்பினால், ‘நீடி.கோ’ (https://neede.co/#/) இணையதளம் வழிகாட்டுகிறது. வடிவமைப்புக்கு தேவையான மென்பொருள்கள், வண்னங்களைத் தேர்வு செய்யும் தளங்கள், ஊக்கம் அளிக்கும் தளங்கள், எழுத்துரு வழிகாட்டிகள் எனப் பலவகையான தளங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இது மிக எளிமையான தளம். இதில் எந்த ஆடம்பர அம்சங்களும் கிடையாது. பயனுள்ள தளங்களின் பட்டியலாக அமைந்துள்ளது. ஹான்சல் வாங் என்பவர் இந்தத் தளத்தை உருவாக்கியுள்ளார். Read More »

மறு அவதாரம் எடுக்கும் ‘வைன்’

இப்போது டிக்டாக்காக மாறியிருக்கும் ‘மியூசிகலி’ செயலி  அறிமுகமாவதற்கு முன்பே இணையத்தில் கலக்கிக்கொண்டிருந்தது ‘வைன்’ (Vine). அமெரிக்காவின் டோம் ஹாப்மன், அவருடைய நண்பர்களால் அறிமுகம் செய்யப்பட்ட வைன், ஆறு நொடி வீடியோக்களை உருவாக்கி பகிர்ந்துகொள்ள வாய்ப்பளித்தது. இந்தச் செயலியிலேயே படம் பிடிக்கும் கேமரா இருந்தது. படம் பிடித்து அதிலேயே ‘எடிட்’ செய்யலாம். இந்த அம்சங்களைச் சாதகமாகப் பயன்படுத்தி, அசத்தலான ஆறு நொடி வீடியோக்களை உருவாக்கி மகிழ்ந்தனர் அதன் பயனாளிகள். குறிப்பாக புதுமையான காமெடி வீடியோக்கள் வைனில் மிகப் பிரபலம். இதற்குக் கிடைத்த வரவேற்பு காரணமாக ‘யாஹு’ ... Read More »

இனி வாட்ஸ் அப் மூலம் ரயில் பயணத்தை லைவ் ஆகத் தெரிந்துகொள்ளலாம், எப்படி?

இந்திய ரயில்வே, தனது பயணங்களை அதிகப் பாதுகாப்பானதாக மாற்ற ஏராளமான முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. முன்னதாக 139 என்ற எண்ணை அழைத்து ரயில் எங்கே வந்துகொண்டிருக்கிறது என்ற தகவலைப் பயணிகள் பெற்றுக்கொண்டிருந்தனர். ஆனால் ஒரே எண்ணை, ஒரே நேரத்தில் ஏராளமானோர் அழைத்ததால், சர்வர் பிரச்சினை ஏற்பட்டு 139-ஐ உடனடியாகத் தொடர்பு கொள்ள முடியாத நிலை இருந்தது.   எப்படி இந்த சேவையைப் பெறுவது? * முதலில் 7349389104 என்ற எண்ணை மொபைலில் சேமித்துக் கொள்ளுங்கள். * வாட்ஸ் அப் செயலிக்குச் செல்லுங்கள். * வாட்ஸ் அப்பில் நீங்கள் ... Read More »