Author Archives: ict news

இது டைரி மாதிரி!

  பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் அதிக நேரத்தை வீணாக்குகிறோம் என்ற எண்ணம் உங்களுக்கு இருக்கிறதா? சமூக ஊடகங்களில் நிலைத்தகவல்களை வெளியிடும் வழக்கம் மிகைப் பழக்கமாக மாறிவிட்டதாக உணர்கிறீர்களா? இவற்றிலிருந்து விடுபட என்ன வழி என யோசிக்கிறீர்களா? அப்படியெனில், ‘டேடிப்’ (https://daydip.com/ ) எனும் இணைய சேவையைப் பயன்படுத்திப் பார்க்கலாம். ‘டேடிப்’ சேவை உங்களுக்கு ஏற்புடையதாக இருந்தால், சமூக ஊடக மோகத்துக்கான மாற்றாக இதைப் பயன்படுத்தத் தொடங்கலாம். ‘டேடிப்’ சேவையை இன்னொரு சமூக ஊடக சேவையாகவோ ஃபேஸ்புக்குக்குப் போட்டி என்றோ நினைக்க வேண்டாம். சமூக ... Read More »

தொழில்நுட்பம் புதிது: புதிய ஆண்டின் புதிய நுட்பம்

2019-ம் ஆண்டில் கோலோச்சப் போகும் தொழில்நுட்பங்கள் எவை? ஸ்மார்ட் உதவியாளர் அல்லது டிஜிட்டல் உதவியாளர் சேவையில் அறிமுகமாக இருக்கும் தொழில்நுட்பங்களைத்தான் வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். குறிப்பாக கார்களில், விரும்பிய வகையில் இசை கேட்க வழி செய்யும் வகையில் டிஜிட்டல் உதவியாளர் சேவைகள் மேம்படும் என்கின்றனர். பயனாளிகளின் தனிப்பட்ட ரசனையைப் புரிந்து கொண்டு அவர்கள் விரும்பக்கூடிய இசையை ஒலிக்கச்செய்வதோடு, காரிலிருந்து வீட்டுக்கு, வீட்டிலிருந்து காருக்கு என்றும் இந்தச் சேவை சிக்கல் இல்லாமல் தொடரும் தன்மை யைக் கொண்டிருக்கும் என்கின்றனர். இதேபோல, டிவியைப் பொறுத்தவரை ‘8 கே’ தொழில்நுட்பம் ... Read More »

கூகுளில் விளையாடத் தயாரா?

தேடு இயந்திர நிறுவனமான கூகுள், 2018-ம் ஆண்டின் தேடல் போக்குகளை மையமாக வைத்து சுவாரசியமான இணைய விளையாட்டு ஒன்றை உருவாக்கியுள்ளது. ‘கேம் ஆஃப் த இயர் வித் கூகுள்’ எனும் இந்தத் தளத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு வரிசை யாகப் பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் விளையாட்டு. கேள்விகள் எல்லாமே கூகுளில் 2018-ல் அதிகம் தேடப்பட்ட விஷயங்கள் தொடர்பானவை. ஒவ்வொரு கேள்வியாக முன்னேறலாம். ஒவ்வொரு கேள்விக்கும் சரியான, தவறான பதில் முன் வைக்கப்படுகிறது. சரியான பதிலைச் சொன்னால் அதிகப் புள்ளிகள் பெறலாம். இந்த விளையாட்டின் போக்கில் ... Read More »

நேரத்தை நிர்வகிக்க உதவும் செயலி

ஸ்மார்ட்போன் நேரத்தை வீணடிப்பதாக புகார் உண்டு, ஆனால் அதே ஸ்மார்ட்போனை வைத்துக்கொண்டு உங்கள் நேரத்தை திறம்பட நிர்வகிக்க வழி காட்டுவதாகச் சொல்கிறது ‘சேவ்மைடைம்’ செயலி. ஸ்மார்ட்போன் பயனாளிகள் அடிக்கடி போனை எடுத்து பார்க்கும் பழக்கத்தையே இந்தச் செயலி சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறது. ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள், சராசரியாக 8 நிமிடங்களுக்கு ஒரு முறை போனை எடுத்து பார்ப்பதாக சொல்லப்படுகிறது. ஒரு நாளில் 120 முறை என வைத்துக்கொள்ளலாம். இப்படி ஒவ்வொரு முறை போனை எடுத்து அன்லாக் செய்ய முற்படும் போதெல்லாம், சேவ்மைடைம் செயலி, நீங்கள் என்ன செய்து ... Read More »

தலைகீழ் எழுத்து

மைக்ரோசாப்டின் வேர்டு பலரும் பயன்படுத்தும் பிரபலமான மென்பொருள்தான். இந்தக் கோப்பில் பலவிதமான அம்சங்களும் இருக்கின்றன. இவற்றில் எழுத்துகளைத் தலைகீழ் வடிவமாகப் பயன்படுத்துவது அல்லது கண்ணாடியில் பார்ப்பதுபோல ரிவர்சாகத் தோன்றும் வகையில் அமைக்கும் அம்சங்கள் உண்டு. இந்த வகையில் எழுத்துகளை உருவாக்க, டூல் பாக்ஸுக்குச் சென்று, இன்சர்ட் டெக்ஸ் பாக்ஸை கிளிக் செய்து அதில் குறிப்பிட்ட வார்த்தையை டைப் செய்து, ஃபார்மட் ஷேப் எனும் அம்சத்தைத் தேர்வுசெய்து, எபெக்ட்ஸ் எனும் வாய்ப்பு மூலம் 3டி ரொட்டேஷன் அம்சத்தை நாட வேண்டும். அதில் பொருத்தமான கோணத்தைத் தேர்வு ... Read More »

சோர்வைக் கண்டறியலாம்

மனச்சோர்வு தொடர்பான புள்ளி விவரங்கள் உண்மையிலேயே சோர்வு அளிக்கக்கூடியவை. உலக சுகாதார அமைப்பின் தகவல்படி ஆண்டுதோறும் 30 கோடி பேர் மனச்சோர்வால் பாதிக்கப்படுகின்றனர். ஆண்டுதோறும் 8 லட்சம் பேர் மனச்சோர்வால் தற்கொலை செய்துகொள்கிறார்கள். மனச்சோர்வுக்கான அறிகுறிகள் மாறுபட்டவையாக அமைகின்றன. இதனால் மனச்சோர்வைக் கண்டறிவதும் சிக்கலாகவே உள்ளது. இந்தப் பின்னணியில்தான், அமெரிக்காவின் எம்.ஐ.டி. பல்கலைக்கழக ஆய்வாளர்கள் செயற்கை நுண்ணறிவு நுட்பத்தைக் கொண்டு மனச்சோர்வைக் கண்டறிவதற்கான வழியை உருவாக்கியுள்ளனர். நரம்பு மண்டல வலைப்பின்னல் மாதிரியை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவு அமைப்பு, மனிதப் பேச்சில் உள்ள அம்சங்களை ... Read More »

ஆபத்துக் காலத்தில் உதவும் செயலி

தனிநபர் பாதுகாப்பு நோக்கோடு உருவாக்கப்பட்டுள்ள செயலிகள் வரிசையில் வருகிறது ‘ஷேக்2சேப்டி’ செயலி. இந்தச் செயலியை நிறுவுவதன் மூலம், அவசர காலத்தில் உதவி தேவையெனில், போனை  ‘ஷேக்’ செய்வதன் மூலம் நெருங்கிய நபர்களுக்கு உதவி கோரிக்கை அனுப்பி வைக்கலாம். இருப்பிடம் பற்றிய தகவல், ஒளிப்படமும் அனுப்பி வைக்கப்படும். பவர் பட்டனை நான்கு முறை அழுத்துவதன் மூலம் இதை இயக்கலாம். செயலியை  நிறுவியவுடன் அவசர காலத்தில் தொடர்புகொள்ள வேண்டிய எண்கள் உள்ளிட்டவற்றைப் பதிவேற்றிக்கொள்ள வேண்டும். பெண்கள், முதியவர்கள், சிறார்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் இந்தச் செயலி பயனுள்ளதாக ... Read More »

ஐபோன் மூலம் புத்தாண்டு வாழ்த்து கூறிய ஹுவாய் ஊழியர்கள்: மெமோ கொடுத்து சம்பளத்தையும் குறைத்த ஹுவாய்

இணையத்தில் உலா வரும் ஸ்க்ரீன்ஷாட். ஹுவாய் நிறுவனத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஐபோன் மூலம் புத்தாண்டு வாழ்த்து கூறிய இரண்டு ஊழியர்களின் சம்பளத்தை ஹுவாய் நிறுவனம் குறைத்துள்ளது. அவர்கள் இருவருக்கும் மெமோ அளிக்கப்பட்டுள்ளது. 2019 புத்தாண்டை முன்னிட்டு, ஹுவாய் நிறுவனத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இருந்து  Happy #2019 என்ற தலைப்பில் வாழ்த்து கூறப்பட்டது. அந்தப் பதிவு ஐபோன் மூலம் பதிவிடப்பட்டிருந்தது. தவறவிடாதீர் இதைத் தொடர்ந்து அந்த ட்வீட்டை ஹுவாய் நிறுவனம் உடனடியாக நீக்கியது. எனினும் பதிவு தொடர்பான ஸ்க்ரீன் ஷாட்டுகள் இணையத்தில் வைரலாகப் ... Read More »