ஜிமெயில் அல்லது கூகுள் அக்கவுன்ட் பாஸ்வேர்டு மறந்து விட்டதா?  ரிக்கவர் செய்வது எப்படி?

கூகுள் அக்கவுன்ட் சேவையை பயன்படுத்தும் போது சில சமயங்களில், பாஸ்வேர்டு மறந்து போகும் நிலையை நம்மில் பலரும் எதிர்கொண்டு இருப்போம். ஒரே பாஸ்வேர்டினை ஜிமெயிலுக்கும் செட் செய்திருக்கும் போது நிலமை இன்னும் மோசமாகி விடும். இதைவிட ஹேக்கர்கள் உங்களது கூகுள் அக்கவுன்ட்டை ஹேக் செய்து உங்களது பாஸ்வேர்டை மாற்றியிருப்பின் நிலமை மேலும் மோசமாகி விடும். சிலர் மூன்றாம் தரப்பு செயலிகளை கொண்டு தங்களது பாஸ்வேர்டுகளை ஒரே இடத்தில் சேமித்து வைத்திருப்பர், எனினும் பலர் இவ்வாறு செய்வதில்லை. இவ்வாறு ஆகும் போது, புது பாஸ்வேர்டை பெறுவது எப்படி? முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.! கூகுள் 1 – கூகுள் லாக் – இன் பக்கத்திற்கு சென்று ‘Forgot password?’ ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். பாஸ்வேர்டு நீங்கள் இறுதியாக நினைவில் வைத்திருக்கும் பாஸ்வேர்டினை பதிவு செய்ய வேண்டும். எந்த பாஸ்வேர்டும் நினைவில் இல்லாத பட்சத்தில் ‘Try another way’ ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். வெரிஃபிகேஷன் இனி கூகுள் உங்களக்கு வெரிஃபிகேஷன் நோட்டிஃபிகேஷனை, உங்களது கூகுள் அக்கவுன்ட் உடன் இணைக்கப்பட்டு இருக்கும் ஸ்மார்ட்போனுக்கு அனுப்பலாமா என கேட்கும். மொபைல் நம்பர் உங்களது மொபைல் நம்பர் உங்களிடம் இல்லாத பட்சத்தில், கூகுள் உங்களுக்கான வெரிஃபிகேஷன் கோடினை மாற்று மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பும். மாற்று மின்னஞ்சல் முகவரி இல்லாத பட்சத்தில் ‘Try another way’ ஆப்ஷனை மீண்டும் கிளிக் செய்ய வேண்டும். மின்னஞ்சல் இனி கூகுள் உங்களை தொடர்பு கொள்ள ஏதேனும் ஒரு மின்னஞ்சல் முகவரியை கேட்கும். இதை கொடுத்ததும், உங்களுக்கான வெரிஃபிகேஷன் குறியீட்டை அனுப்பும். டயலாக் பெட்டி உங்களுக்கான வெரிஃபிகேஷன் குறியீட்டை பெற்றதும், கூகுளின் டயலாக் பெட்டியில் பதிவு செய்ய வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*