தொழில்நுட்பம் புதிது: இருண்ட வலை!

‘டார்க் வெப்’ எனக் குறிப்பிடப்படும் ‘இருண்ட வலை’ பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். வழக்கமாக நாம் அணுகும் இணையத்தின் பின்னே மறைந்திருக்கும், தேடு இயந்திரங்களால் அணுக முடியாத ஆழ் வலையின் ஒரு அங்கமாக இது கருதப்படுகிறது. இந்த வலையிலிருக்கும் தளங்களை அணுகப் பிரத்யேகமான பிரவுசர்கள், மென்பொருள்கள் தேவை. ஹேக்கர்கள் புழங்கும் இடமாகவும் இது அறியப்படுகிறது. ஆனால், ஆழ் வலை என்று வரும்போது அதில் மேலும் பல சங்கதிகள் இருக்கின்றன. ஆழ் வலை நாமறிந்த வைய விரிவு வலையைவிட 400 அல்லது 500 மடங்கு பெரியதாக இருக்கலாம். ... Read More »

செயலி புதிது: தென்னக ரயில் செயலி

ரயில்களின் பயண நேரம், பயணச்சீட்டு களின் நிலை உள்ளிட்ட தகவல்களை அறிய வழி செய்யும் செயலிகள் பல இருக்கின்றன. ஆனால், இவற்றின்  தகவல்கள் அதிகாரபூர்வ மானவை அல்ல. இந்நிலையில் தென்னக ரயில்வே சார்பில் ரயில் பயணிகளுக்கான செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ‘ரயில் பார்ட்னர்’ எனும் பெயரிலான இந்தச் செயலி, ரயில்வே துறை வழங்கும் பல்வேறு சேவைகள் தொடர்பான தகவல்களை எளிதாக அறிந்துகொள்ளும் வகையில் அமைந்துள்ளது. சென்னை புறநகர் ரயில் தகவல்கள், பயணச்சீட்டு முன்பதிவுத் தகவல்கள் உள்ளிட்ட தகவல்களை இந்தச் செயலி மூலம் அறியலாம். இந்தச் ... Read More »

தொழில்நுட்பம் புதிது: சோர்வைக் கண்டறியலாம்

மனச்சோர்வு தொடர்பான புள்ளி விவரங்கள் உண்மையிலேயே சோர்வு அளிக்கக்கூடியவை. உலக சுகாதார அமைப்பின் தகவல்படி ஆண்டுதோறும் 30 கோடி பேர் மனச்சோர்வால் பாதிக்கப்படுகின்றனர். ஆண்டுதோறும் 8 லட்சம் பேர் மனச்சோர்வால் தற்கொலை செய்துகொள்கிறார்கள். மனச்சோர்வுக்கான அறிகுறிகள் மாறுபட்டவையாக அமைகின்றன. இதனால் மனச்சோர்வைக் கண்டறிவதும் சிக்கலாகவே உள்ளது. இந்தப் பின்னணியில்தான், அமெரிக்காவின் எம்.ஐ.டி. பல்கலைக்கழக ஆய்வாளர்கள் செயற்கை நுண்ணறிவு நுட்பத்தைக் கொண்டு மனச்சோர்வைக் கண்டறிவதற்கான வழியை உருவாக்கியுள்ளனர். நரம்பு மண்டல வலைப்பின்னல் மாதிரியை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவு அமைப்பு, மனிதப் பேச்சில் உள்ள அம்சங்களை ... Read More »

தளம் புதிது: சார்ட்களை உருவாக்கும் இணையம்

தகவல்களைக் காட்சி வடிவில் எளிதாகப் புரிந்துகொள்ள வழி செய்யும்  ‘இன்போகிராப்’ எனப்படும் தகவல் வரைபடங்களை உருவாக்கிக்கொள்ளும் சேவையை ‘கேன்வா’ உள்ளிட்ட இணையதளங்கள் அளிக்கின்றன. இவற்றின் மூலம் விதவிதமான இன்போகிராப்களை நீங்களே உருவாக்கலாம். இதேபோல, ‘சார்ட்’ எனக் குறிப்பிடப்படும் வரைபடங்களை உருவாக்கிக்கொள்ள ‘சார்டிபை’ (https://chartify.io/) இணையதளம் வழிசெய்கிறது. நாளிதழ்கள், பத்திரிகைகளில் கட்டுரைகளுடன் அல்லது தனியே பார்க்கக்கூடிய பை சார்ட், பார் சார்ட், காலம் சார்ட் போன்ற சார்ட்களை இதன் மூலம் எளிதாக உருவாக்கிக்கொள்ளலாம். எல்லா சார்ட்களுமே டெம்பிளேட் வடிவில் இருக்கின்றன. அவற்றைத் தேர்வுசெய்து, அதில் தகவல்களை ... Read More »

கேட்ஜெட் புதிது: ஃபோல்டபிள் போன் அறிமுகம் எப்போது?

சாம்சங் உள்ளிட்ட நிறுவனங்கள் மடங்கும் தன்மை கொண்ட ஃபோல்டபிள் போன் உருவாக்கத்தில் ஈடுபட்டிருப்பதாகக் கூறப்படும் நிலையில், அண்மையில் சாம்சங் நிறுவனம் தனது ஃபோல்டபிள் போனுக்கான கருத்தாக்கத்தை அறிமுகம் செய்தது. கண்ணாடித் திரைக்குப் பதிலாகப் பிரத்யேகமான இன்ஃபினிட்டி பிளக்சி டிஸ்பிளே கொண்டதாக இந்த போன் இருக்கும் என சாம்சங் கூறியது. மடங்கும் நிலையில் ஸ்மார்ட்போனாகவும், பிரித்த நிலையில் டேப்லெட்டாகவும் இருக்கக்கூடிய இந்த போன் பற்றி வேறு அதிக விவரங்கள் வெளியிடப்பவில்லை. ‘காலெக்ஸி எப்’ என அழைக்கப்படக்கூடிய இந்த போன் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் அறிமுகமாகும் ... Read More »

செயலி புதிது: யாஹுவின் செய்தி செயலி

யாஹு நிறுவனம் அண்மைக் காலமாகப் புதிய சேவைகளை அறிமுகம் செய்துவருகிறது. இந்த வரிசையில் இப்போது ‘வேக்கிங் நியூஸ்’ எனும் புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்தச் செயலி காலையில் கண் விழிக்க உதவும் அலாரம் வகையைச் சேர்ந்தது. இதில் ஒரு வித்தியாசமான அம்சமும் இருக்கிறது. இது அலாரம் ஒலி எழுப்புவதற்குப் பதில், அன்றைய தினச் செய்திச் சுருக்கங்களை ஒலிக்கச்செய்கிறது. பல்வேறு செய்தித் தளங்களிலிருந்து செய்தி சேவையைத் தேர்வு செய்துகொள்ளலாம். ஆண்ட்ராய்டு போன்களுக்கு அறிமுகம் ஆகியுள்ளது. அமெரிக்காவில் முதல் கட்டமாக அறிமுகம் ஆகியுள்ளது. மேலும் விவரங்களுக்கு: ... Read More »

மீண்டும் ப்ரொஃபைல் பக்கத்தை மாற்றியமைக்கும் இன்ஸ்டாகிராம்

பயனர்களின் ப்ரொஃபைல் தோற்றத்தை இன்ஸ்டாகிராம் மீண்டும் மாற்றியமைக்க உள்ளது. ப்ரொஃபைல் பக்கத்தில் இருக்கும் விஷயங்களை இடம் மாற்றவும் உள்ளது. இந்த வருடம் டிசம்பர் மாதம் வரை புதிய மாற்றங்களை பரிசோதிக்க உள்ளதாக அந்நிறுவனம் தனது வலைப்பக்கத்தில் தெரிவித்துள்ளது. இதில் ப்ரொஃபைலுக்கு மேலே இருக்கும் அம்சங்கள் எப்படி தெரியும், ஐகான் மற்றும் பட்டன்களில் இருக்கும் மாற்றங்கள், ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்துக்குச் செல்லும் முறை என மாதிரிப் புகைப்படங்களைக் காட்டியுள்ளது. இதில் முக்கிய மாற்றமாக, ப்ரொஃபைல் புகைப்படம் வலது பக்கம் மாறும், அதன் விவரணை இடது ... Read More »

செயலி புதிது: விரைவில் சென்னையில் நெய்பர்லி செயலி

தனது கேள்வி பதில் சேவையான ‘நெய்பர்லி’ (Neighbourly) செயலியை நாடு முழுவதும் அறிமுகம் செய்ய உள்ளது. கேள்வி பதில் தளமான ‘குவோரா’ போன்ற இந்தச் செயலி, பயனாளிகள் சுற்றுப்புறம் தொடர்பான கேள்விகளை எழுப்பி அதற்கான பதில்களை சக பயனாளிகளிடமிருந்து பெற உதவுகிறது. குழாய் பழுது பார்ப்பவர் சேவை தொடங்கி அருகில் உள்ள சிறந்த ரெஸ்டாரண்ட்வரை எண்ணற்ற கேள்விகளை இந்தச் செயலி மூலம் கேட்டுப் பதில் பெறலாம். தகவல் அறிந்தவர்கள் இதற்கான பதிலை அளிக்கலாம். ஜி.பி.எஸ். அடிப்படையில் இந்தச் சேவை செயல்படுகிறது. இந்தச் சேவை ஒவ்வொரு ... Read More »

தளம் புதிது: ரெஸ்யூம் உருவாக்க உதவும் தளம்

வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும்போது ரெஸ்யூம் தொடர்பாகப் பலவிதக் கேள்விகளும் சந்தேகங்களும் இருக்கலாம். ரெஸ்யூமைத் தயாரிக்கும்போது அது சிறந்ததாக இருக்கிறதா, திறமைகளை எல்லாம் வெளிப்படுத்தும் வகையில் இருக்கிறதா போன்ற கேள்விகள் எழலாம். இந்தக் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் வகையில் நேர்த்தியான முறையில் தொழில்முறை ரெஸ்யூம்களை உருவாக்கிக்கொள்ள ‘மைரெஸ்யூம்பார்மெட்’ தளம் கைகொடுக்கிறது. இந்தத் தளத்தில் ஐந்தே நிமிடங்களில் நேர்த்தியான ரெஸ்யூமைத் தயார் செய்துவிடலாம். இதிலிருந்து மாதிரி ரெஸ்யூம்களைத் தேர்வு செய்து, அதிலுள்ள அம்சங்களுக்கு ஏற்ப, தனிப்பட்ட தகவல்களை இடம்பெறச்செய்து நமக்கான ரெஸ்யூமை உருவாக்கலாம். முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பைப் பெற்றுத்தந்த ... Read More »

இனி குழுக்களிலேயே தனி நபருக்கு பதில் மெசேஜ் அனுப்பலாம்: வாட்ஸ் அப்பில் புதிய வசதி

குழுக்களிலேயே அந்தரங்க முறையில், தனி நபருக்கு பதில் மெசேஜ் அனுப்பும் வசதியை வாட்ஸ் அப் அறிமுகப்படுத்தி உள்ளது. ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தப்படும் ‘மெசேஜிங்’ சேவைகளில் பிரபலமானதாகவும், அதிகம் பயன்படுத்தப்படும் சேவையாகவும் இருக்கும் ‘வாட்ஸ் ஆப்’, இணைய உலகின் வெற்றிக்கதைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதன் அடையாளமாகத்தான் கடந்த 2014-ம் ஆண்டில் முன்னணி சமூக வலைதளமான‌ ஃபேஸ்புக் அதை 19 பில்லியன் டாலர் விலை கொடுத்து வாங்கியது. இன்றைக்கு இந்தியாவில் 20 கோடிக்கும் மேலானோர் வாட்ஸ் அப்பைப் பயன்படுத்துகின்றனர். இது, முன்னணிச் செயலிகளில் ஒன்றாக இருப்பதோடு, வீடியோ ... Read More »