பிகல்லியோடு (Pically) உங்கள் நாள்காட்டியை உருவாக்குங்கள்

புகைப்படங்கள் முடிவுற்ற காலத்தின் நினைவுகளைக் குறிக்கின்றன. நாள்காட்டி வருங்காலத்தைக் குறிக்கும். இவ்வாறு வெவ்வேறு காலங்களில் அடைபட்டுக் கிடக்கும் இரண்டையும் ஒருங்கிணைக்கும் பாலமாக விளங்குவது தான் பிகல்லி (Pically).

உங்களுக்கு மிகவும் பிடித்த புகைப்படங்களை ஒவ்வொரு மாதங்களுக்கும் தேர்வு செய்து, விடுமுறை மற்றும் சுபதினங்கள் ஆகியவற்றைச் சேர்த்து, ஒரு நாள்காட்டியாக உருவாக்கி தொங்க விடலாம். இதுவரை நடந்த நிகழ்வுகளை நினைவு கூறுவதாகவும், வருங்கால கனவுகளைக் கண்முன் கொண்டு வருவதாகவும் அது அமையும். இது ஜாவா நிரல் மொழியால் உருவாக்கப்பட்ட செயலியாதலால், இதை லினக்ஸ், விண்டோஸ் மற்றும் மேக் கணினிகளில் பயன்படுத்தலாம்.

பிகல்லியை பயன்படுத்த உங்கள் கணினியில் ஜாவா நிறுவப்பட்டிருக்க வேண்டும். இது பெயரத்தக்க செயலி (Portable app) ஆகும். ஆதலால், தரவிறக்கம் செய்த கோப்பை இரட்டை சொடுக்கு செய்வதன் மூலமே, செயலியைத் துவக்கி நாள்காட்டியை உருவாக்கி விடலாம். இதன் பயனர் இடைமுகம் (user interface) மிக எளிதாக புரிந்து கொள்ளக்கூடியது. நாள்காட்டியில் புகைப்படத்தை ஏற்றுவதற்கு, விரும்பிய படத்தை முகப்பில் தோன்றும் ஏதேனும் ஒரு மாதத்தில் இழுத்து விட்டால் போதுமானது. அல்லது, முகப்பில் தோன்றும் மாதங்களில் உள்ள ‘Select Picture’ விசையை அழுத்தி, கணினியில் உள்ள ஏதேனும் ஒரு படத்தைத் தேர்ந்தெடுக்கலாம்.

நீங்கள் சிறப்பு வாய்ந்ததாக கருதும் தருணங்களை ‘Events’ தாவலில் (tab) உள்ள வாய்ப்புகளை கொண்டு உருவாக்கி, நாள்காட்டியில் இணைக்கலாம். இதற்கு, எளிதாக ‘நிகழ்வு வகை’ மற்றும் ‘நாளை’ (event type and date) தேர்வு செய்து ‘Add Event’ விசையை அழுத்தினால் போதுமானது. அந்த நிகழ்வு என்ன என்பதை நீங்களாகவே நேரடியாக தட்டச்சும் செய்யலாம். இம்முறையில் உங்கள் நாள்காட்டி உருவாகிறது என்பதால், நீங்கள் வரவிருக்கும் சுபதினங்களை ஆவலுடன் எதிர்நோக்கி இருப்பீர்கள்.

1

நிகழ்வுகளில் மாற்றங்கள் ஏதெங்கிலும் உண்டெனில், அதையும் நேரடியாக செய்யலாம். அவ்வாறு தேவையற்ற நிகழ்வுகளை அகற்ற, அந்த நிகழ்வை தேர்வு செய்து ‘Delete Event’ விசையை அழுத்தினால் போதுமானது. உருள் பட்டையின் (scroll bar) மேல் அமைந்துள்ள சிறிய விசையானது ‘Date’, ‘Month’, ‘Text’ , ‘Type’ போன்ற தேர்வுகள் முகப்பில் தெரியவும் அல்லது மறையவும் வழிவகுக்கிறது. எடுத்துக்காட்டாக, ‘Type’ மற்றும் ‘Text’ போன்ற தேர்வுகள் சாளரத்தில் தோன்ற வேண்டாம் என நீங்கள் எண்ணினால், அதை மேற்குறிப்பிட்ட விசையைக் கொண்டு நிறைவேற்றலாம். ‘Actions’ தாவலில் (tab) 2011 – 2015 வரை உள்ள ஆண்டுகளைத் தேர்வு செய்யலாம். இனி ‘Generate’-ஐ அழுத்தி, PDF வடிவில் நாள்காட்டியை உருவாக்கி கொள்ளலாம்.

நீங்கள் மேக் கணினி பயன் படுத்துவோர், ‘Import iCal’ விசையை பயன்படுத்தி நியமனங்கள், ஒப்பந்தங்கள் (appoinments, engagements) உள்ளடக்கிய ‘iCalender’ கோப்பை தரவேற்றலாம். அப்படிச் செய்தால், உங்கள் மென் நாள்காட்டிக்கு நிகரானதாக தற்போது உருப்பெற்ற இயல்பான நாள்காட்டி இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*