Google Business பக்கத்தை உருவாக்குவது எப்படி?

Google Business பக்கம் என்பது, நாம் கூகுள் தேடுபொறியில் சர்ச் செய்யும் போது முகப்பு பகுதியில் Right Side தோன்றும் விவரங்கள் ஆகும். இது மிக முக்கியமான தகவல்களை கொண்டிருக்கும். உதாரணமாக கூகுள் மேப், வேலை செய்யும் நேரம் மற்றும் முகவரி போன்றவைகள் ஆகும்.
இந்த Google Business சேவையினை நம்முடைய அலுவலகத்திற்கோ அல்லது வலைதளம்/வலைப்பூவிற்கோ நாம் எவ்வாறு பெறுவது என்று பலருக்கு தெரியாமல் இருக்கலாம் இந்த பதிவு அவர்களுக்கானது.
மேலே உள்ள சுட்டியை கிளிக் செய்து Google Business பக்கத்திற்கு செல்லவும். பின் START NOW என்னும் பொத்தானை அழுத்தவும். அடுத்து உங்களுடைய கூகுள் கணக்கினை கொண்டு லாகின் செய்து கொள்ளவும்.
பின்  மேலே உள்ள விண்டோ போன்று தோன்றும் அதில் உங்களுடைய பிசினஸ் சார்ந்த விவரங்களை உள்ளிடவும். பின் Continue என்னும் பொத்தானை அழுத்தியவுடன் உங்களுடைய கோரிக்கை கூகுளுக்கு அனுப்பபடும். நீங்கள் அளித்த விவரங்கள் சரியாக இருந்தால் கூகுள் தரப்பிலிருந்து 12 நாட்களுக்குள் நீங்கள் குறிப்பிட்ட முகவரிக்கு ஒரு இரகசிய எண் அனுப்பபடும். அதை கூகுள் பிசினஸ் பக்கத்திற்கு சென்று , உங்கள் கணக்கில் லாகின் செய்தபின் இந்த இரகசிய எண்னை உள்ளிடவும். அவ்வளவு தான் வேலை முடிந்தது.
இப்போது கூகுள் சர்ச் எஞ்சின் சென்று சர்ச் செய்து பார்த்தால் நீங்கள் குறிப்பிட்ட விரவரங்களை காண முடியும். நான் என்னுடைய tamilcomputer வலைப்பூவினை கூகுள் பிசினஸ் பக்கத்தில் சேர்த்துள்ளேன். நீங்கள் கூகுள் சென்று tamilcomputer என்று கூகுள் செய்து பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*