கூகுள் டையலரின் ஃபுளோட்டிங் பப்புள் அம்சத்தை இயக்குவது எப்படி?

புதிய ஆன்ட்ராய்டு இயங்குதளம் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு அழைப்புகள் திரையின் நடுவே பிளாக் வடிவில் காண்பிக்கப்படுகிறது. இது ஸ்மார்ட்போனில் ஒருவர் பயன்படுத்தும் அனைத்து செயலிகளையும் முடக்கி, புது தகவல்களை காண்பிக்கும். இந்த அம்சம் டையலரின் முந்தைய வெர்ஷன்களை விட மேம்பட்டு இருக்கிறது. எனினும் இந்த அம்சம் நாளடைவில் கோபத்தை தூண்டும் ஒன்றாகவும் இருக்கிறது. கூகுளின் புது டையலர் அம்சம் மூலம் அழைப்புகள் மிதக்கும் பப்புள் போன்று திரையில் தோன்றுவதோடு எவ்வித இடையூறும் ஏற்படுத்துவதில்லை. இதனால் நோட்டிஃபிகேஷன் வரும் போதும் தொடர்ந்து மற்ற செயலிகளை எவ்வித இடையூறும் இன்றி பயன்படுத்த முடியும். இந்த பப்புள்கள் லவுட்ஸ்பீக்கர், மியூட் உள்ளிட்டவற்றுக்கும் ஆப்ஷன்களை கொண்டுள்ளது. இதை எவ்வாறு செய்ல்படுத்த வேண்டும்? இந்த அம்சம் பிளே ஸ்டோர் மூலம் கிடைக்கவில்லை என்பதால், மூன்றாம் தரப்பு செயலியை டவுன்லோடு செய்ய வேண்டும். இதற்கு https://forum.xda-developers.com/android/apps-games/app-google-dialer-t3557412 முகவரியை பயன்படுத்தலாம். சமீபத்திய ஏ.பி.கே. ஃபைலினை டவுன்லோடு செய்ய வேண்டும். இதற்கு ஆன்ட்ராய்டு மார்ஷ்மல்லோ அல்லது அதற்கும் அதிக இயங்குதளத்தை பயன்படுத்த வேண்டும். மூன்றாம் தரப்பு செயலிகளை இன்ஸ்டால் செய்ய ஸ்மார்ட்போனில் அதற்கான அனுமதியை வழங்க வேண்டும். செட்டிங்ஸ் மெனுவின் கீழ் இருக்கும் செக்யூரிட்டி அம்சத்தை கிளிக் செய்ய வேண்டும். இனி அன்-நோன் சோர்சஸ் ஆப்ஷனை செயல்படுத்த வேண்டும். அடுத்து டவுன்லோடு செய்யப்பட்ட ஃபைலினை ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்ய வேண்டும். உங்களது மொபைலில் தற்சமயம் இரண்டு டையலர் செயலிகள் இடம்பெற்று இருக்கும். டீஃபால்ட் செயலியை மாற்றவில்லை என்றால் புதிதாக இன்ஸ்டால் செய்த செயலியை பயன்படுத்த முடியாது. இவ்வாறு செய்ய – – மீண்டும் செட்டிங்ஸ் ஆப்ஷன் சென்று ஆப்ஸ் மெனுவை கிளிக் செய்ய வேண்டும். – செயலியினுள் கியர் ஐகானை கிளிக் செய்ய வேண்டும். – இங்கு உங்களது டீஃபால்ட் ஆப் உள்பட பல்வேறு ஆப்ஷன்கள் தெரியும். – இதனை திறந்து இன்ஸ்டால் செய்த செயலிக்கு மாற்ற வேண்டும். இதைத் தொடர்ந்து மொபைலின் டீஃபால்ட் செயலியை செயலிழக்கச் செய்ய வேண்டும். – இறுதியாக, ஆப் பெர்மிஷன்ஸ் ஆப்ஷன் சென்று, டெலிஃபோன் பெர்மிஷன்ஸ் ஆப்ஷனில் நீங்கள் இன்ஸ்டால் செய்த செயலிக்கு அனுமதி வழங்க வேண்டும். இனி நீங்கள் இன்ஸ்டால் செய்த செயலியை பயன்படுத்த துவங்கலாம். நீங்கள் முந்தைய ஆப்ஷன்களில் மாற்றிய செயலிகளை மீண்டும் மாற்றிக் கொள்ளலாம். இந்த ஆப்ஷன் ரூட் செய்யப்படாத போன்களுக்கு மட்டும் தான் பயன்படுத்த முடியும். ரூட் செய்யப்பட்ட மொபைல் போன்களுக்கு பின்வரும் வழிமுறைகளை பயன்படுத்திக் கொள்ளலாம்: – முதலில் ஃபைல் மேனேஜர் சென்று /data/data/com.google.android.dialer/shared_prefs ஆப்ஷன்களை தேர்வு செய்யலாம். – இனி .xml போன்று பல்வேறு ஃபைல்களை காண முடியும். இதில் போனினை டையலர் _phenotype_flags.xml திறக்க வேண்டும். – இனி G_enable_return_to_call_bubble ஆப்ஷன் சென்று குறியீட்டை மாற்ற வேண்டும். உண்மையில் ஃபால்ஸ் (False) என செட் செய்திருப்பின், அதனை ட்ரூ (True) என மாற்றி சேவ் செய்ய வேண்டும். – அடுத்து உங்களை டீஃபால்ட் போன் ஆப் மாற்றியதை போன்று டிசேபிள் செய்து பின் ரீஸ்டார்ட் செய்ய வேண்டும். இந்த ஆப்ஷன்களை பின்பற்றியதும், ஃபுளோட்டிங் பப்புள் டையலரை ரூட் செய்யப்பட்ட மொபைலில் இயக்க முடியும். பப்புள் ஆப்ஷனை அழுத்தி பிடித்து மெனு ஆப்ஷனில் லவுட்ஸ்பீக்கர், மியூட், கால் போன்ற ஆப்ஷன்களை தேர்வு செய்யலாம்.

Read more at: https://tamil.gizbot.com/how-to/how-enable-google-dialers-floating-bubble-feature-020146.html

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*