தொழில்நுட்பம் புதிது: இருண்ட வலை!

‘டார்க் வெப்’ எனக் குறிப்பிடப்படும் ‘இருண்ட வலை’ பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். வழக்கமாக நாம் அணுகும் இணையத்தின் பின்னே மறைந்திருக்கும், தேடு இயந்திரங்களால் அணுக முடியாத ஆழ் வலையின் ஒரு அங்கமாக இது கருதப்படுகிறது. இந்த வலையிலிருக்கும் தளங்களை அணுகப் பிரத்யேகமான பிரவுசர்கள், மென்பொருள்கள் தேவை. ஹேக்கர்கள் புழங்கும் இடமாகவும் இது அறியப்படுகிறது.

ஆனால், ஆழ் வலை என்று வரும்போது அதில் மேலும் பல சங்கதிகள் இருக்கின்றன. ஆழ் வலை நாமறிந்த வைய விரிவு வலையைவிட 400 அல்லது 500 மடங்கு பெரியதாக இருக்கலாம். கோடிக்கணக்கான இணையதளங்களின் தொகுப்பாக இருக்கும் நாம் அறிந்த வலை, மேல்பரப்பு மட்டும்தான். அதன் அடி ஆழத்தில் இன்னும் பெரிய இணைய உலகம் இருக்கிறது என்பது இதன் பொருள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*