வாட்ஸ்அப் செயலியில் உங்களின் சொந்த ஸ்டிக்கர்களை உருவாக்குவது எப்படி?

வாட்ஸ்அப் செயலியில் பல்வேறு புதிய வசதிகள் தொடர்ந்து சேர்க்கப்படுகிறது. இவற்றின் புது அம்சமாக ஃபேஸ்புக் மெசஞ்சரில் வழங்கப்பட்டிருப்பதை போன்ற ஸ்டிக்கர்கள் இருக்கிறது. இந்த அம்சம் கொண்டு பயனர்கள் செயலியினுள் ஸ்டிக்கர்களை பகிர்ந்து கொள்ள முடியும்.

வழக்கமான வார்த்தைகள், ஜிஃப், புகைப்படம் மற்றும் க்களுடன் ஸ்டிக்கர் அம்சம் கொண்டு பயனர்கள் சொல்ல விரும்பும் தகவல்களை வித்தியாசமாக பகிர்ந்து கொள்ள முடியும்.

தீபாவளி சமயத்தில் வாட்ஸ்அப் செயலியில் விசேஷ ஸ்டிக்கர் பேக் பண்டிகை காலத்திற்கான பிரத்யேக ஸ்டிக்கர்களுடன் வழங்கப்பட்டது. இதனுடன் செயலியில் பயனர்கள் விரும்பும் ஸ்டிக்கர்களை உருவாக்கிக் கொள்ளும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதை கொண்டு பயனர்கள் செயலியில் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள ஸ்டிக்கர்களுடன், தங்களது புகைப்படங்களையும் ஸ்டிக்கர்களாக மாற்றிக் கொள்ள முடியும்.

குறிப்பாக, வாட்ஸ்அப் செயலியில் உலகம் முழுக்க டெவலப்பர்கள் மற்றும் வடிவமைப்பாளர்கள் உருவாக்கும் மூன்றாம் தரப்பு ஸ்டிக்கர் பேக்களை பயன்படுத்துவதற்கான வசதியும் வழங்கப்பட்டுள்ளது. கூகுள் பிளே ஸ்டோரில் இதுபோன்ற ஸ்டிக்கர்களை வழங்கும் பல்வேறு செயலிகள் கிடைக்கின்றன. பயனர்கள் இவற்றை டவுன்லோடுசெய்து வாட்ஸ்அப் செயலியினுள் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

உங்களுக்கான சொந்த வாட்ஸ்அப் ஸ்டிக்கர்களை உருவாக்குவது எப்படி?வாட்ஸ்அப் செயலியில் உங்களுக்கான சொந்த ஸ்டிக்கர்களை உருவாக்க நீங்கள் டெவலப்பராக இருக்க வேண்டிய அவசியம் கிடையாது. மேலும் வாட்ஸ்அப் செயலிக்கென கிடைக்கும் மூன்றாம் தரப்பு ஸ்டிக்கர் செயலிகளை பயன்படுத்தினாலே போதுமானது. உங்களுக்கென பிரத்யேக ஸ்டிக்கர்களை உருவாக்கும் வழிமுறைகளை தொடர்ந்து பார்ப்போம்.

வழிமுறை 1:உங்களது ஸ்மார்ட்போனில் ‘Sticker maker for WhatsApp’ என்ற செயலியை டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

வழிமுறை 2:செயலியை திறந்து, ‘Create a new stickerpack’ ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். இனி நீங்கள் விரும்பும் பேக் மற்றும் ஆத்தர் பெயர்களை பதிவிட வேண்டும்.

வழிமுறை 3:இங்கு டிரே ஐகான் தெரியும், இதை கிளிக் செய்து தேவையான அனுமதிகளை வழங்க வேண்டும்.

வழிமுறை 4:அடுத்து ‘select file’ அல்லது ‘take phone’ ஆப்ஷன்களில் ஒன்றை தேர்வு செய்து புகைப்படத்தை அப்லோடு செய்ய வேண்டும். இனி, புகைப்படத்தில் நீங்கள் ஸ்டிக்கர் போன்று பயன்படுத்த விரும்பும் பகுதியை சுற்றி ஒரு கோடிட வேண்டும்.

வழிமுறை 5:ஸ்டிக்கரை பதிவு செய்து பேக்கை சேர்க்க வேண்டும். குறிப்பாக குறைந்தபட்சம் மூன்று ஸ்டிக்கர்களை உருவாக்க வேண்டும். அதிகபட்சம் முப்பது ஸ்டிக்கர்களை சேர்க்க முடியும்.

வழிமுறை 6:ஸ்டிக்கர் பேக் பதிவு செய்ய வேண்டும். வேறு யாரேனும் ஸ்டிக்கர் பேக் பயன்படுத்த வேண்டும் எனில், உங்களுக்கு தகவல் கிடைக்கும்.

இதன் மூலம் உங்களுக்கு விருப்பமான பிரத்யேக ஸ்டிக்கர்களை உருவாக்கிக் கொண்டு, அதனை நண்பர்கள், குடும்பத்தாருடன் பகிர்ந்து கொள்ள முடியும். சொந்த புகைப்படங்களை பயன்படுத்துவதன் மூலம் செயலியில் தனிப்பட்ட அனுபவம் கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*