மின்னஞ்சல் மூலம் பெரிய தரவுகளை அனுப்புவது எப்படி?

மின்னஞ்சல் மூலம் தகவல் பரிமாற்றம் மிக எளிமையான ஒன்றாகி இருக்கும் நிலையில், பல்வேறு மின்னஞ்சல் சேவைகளில் நிர்ணயிக்கப்பட்டு இருக்கும் ஃபைல் அளவு காரணமாக சில தகவல்களை பரிமாற்றம் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது.

ஜிமெயில், யாஹூ, எம்.எஸ்.என். மற்றும் பல்வேறு மின்னஞ்சல் சேவைகள் கிடைக்கின்றன. இந்த மின்னஞ்சல் சேவைகள் ஒவ்வொன்றிலும் தகவல் பரிமாற்றம் செய்வதற்கான ஃபைல் அளவு வேறுபடுகிறது. எனினும், இவற்றில் சில வழிமுறைகளை பின்பற்றினால் பெரிய தரவுகளையும் மின்னஞ்சல் மூலம் பரிமாற்றிக் கொள்ளலாம். இதை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

கூகுள் டிரைவ்:கூகுள் டிரைவில் நீங்கள் விரும்பும் தரவை அப்லோடு செய்து அதற்கான டவுன்லோடிங் லின்க் முகவரியை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டால் வேலை முடிந்தது. கூகுள் டிரைவ் சேவையை கொண்டு 15 ஜி.பி. வரையிலான மெமரி கொண்ட தரவுகளை இலவசமாக பரிமாற்றம் செய்து கொள்ளலாம். கூகுள் டிரைவ் மூலம் அதிக மெமரி கொண்ட தரவுகளை பரிமாற்றம் செய்வது எப்படி?

வழிமுறை 1: கூகுள் டிரைவ் சென்று உங்களது கூகுள் அக்கவுன்ட் மூலம் சைன்-இன் செய்ய வேண்டும்.

வழிமுறை 2: உங்களது அக்கவுன்ட்டில் லாக்-இன் செய்ததும், திரையில் தோன்றும் அப்லோடு பட்டனை கிளிக் செய்து, நீங்கள் மற்றவருடன் பகிர்ந்து கொள்ள விரும்பும் தரவுகளை தேர்வு செய்ய வேண்டும். இனி திரையின் வலது புறத்தில் தரவுகள் அப்லோடு ஆவதை பார்க்க முடியும்.

வழிமுறை 3: அப்லோடு துவங்கியதும், ஷேர் செய்யக் கோரும் ஆப்ஷனை கிளிக் செய்து ஷேர் செய்யக் கோரும் செட்டிங்களில் தரவுகளின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பை நிர்ணயம் செய்யலாம்.

வழிமுறை 4: இனி ஜிமெயில் மூலம் தரவுகளை நேரடியாக மற்றவர்களுக்கு பரிமாற்றம் செய்ய முடியும். ஷேர் பட்டனை கிளிக் செய்ததும், தரவுகளை ஃபேஸ்புக், ட்விட்டர் மூலமாக பகிர்ந்து கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது.

பலக்கட்ட ஆர்ச்சிவ்கள்அதிக மெமரி கொண்ட தரவுகளை பரிமாற்றம் செய்வதில் இது பழைய வழிமுறை எனலாம். நீங்கள் பரிமாற்றம் செய்ய வேண்டிய தரவுகளை சிறுசிறு விதமாக பிரித்துக் கொள்ள வேண்டும். 70 எம்.பி. அளவு கொண்டிருக்கும் தரவுகளை 10 எம்.பி. அளவில் பிரித்துக் கொள்ளலாம். இதற்கு தரவுகளை கம்ப்ரெஸ் செய்யும் மென்பொருள்களை பயன்படுத்தலாம்.

அதிக மெமரி கொண்ட தரவுகளை பரிமாற்றம் செய்யும் சேவைகள்மேலே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகள் பலன் கொடுக்காத பட்சத்தில் ஆன்லைனில் கிடைக்கும் சேவைகளை பயன்படுத்தலாம். ஆன்லைனில் இவ்வாறு செய்ய பல்வேறு சேவைகள் இலவசமாகவும், கட்டணத்திற்கும் கிடைதக்கிறது.

வழிமுறை1 – ஜம்ப்ஷேர்: ஜம்ப்ஷேர் கொண்டு அதிக மெமரி கொண்ட தரவுகளை இலவசமாக பகிர்ந்து கொள்ள முடியும். இந்த சேவையை கொண்டு அதிகபட்சம் 250 எம்.பி. அளவு கொண்ட மெமரியை மட்டுமே பகிர்ந்து கொள்ள முடியும். எனினும் கட்டண சேவையை பயன்படுத்தும் போது எவ்வித கட்டுப்பாடும் இன்றி தரவுகளை பரிமாற்றம் செய்யலாம்.

2 – செக்யூர்லி சென்ட்: செக்யூர்லி சென்ட் சேவையை கொண்டு அதிகபட்சம் 200 எம்.பி. மெமரி கொண்ட தரவுகளை இலவசமாக பகிர்ந்து கொள்ளலாம். இந்த சேவையிலும் கட்டணம் செலுத்தினால் எவ்வித கட்டுப்பாடும் இன்றி தரவுகளை பரிமாற்றம் செய்யலாம்.

3 – வி-டிரான்ஸ்ஃபெர்: இந்த ஆன்லைன் சேவையை கொண்டு தரவுகளை இலவசமாக பரிமாற்ரம் செய்யலாம்.

4 – ஒன் டிரைவ்: இந்த கிளவுட் ஸ்டோரேஜ் சேவை மைக்ரோசாஃப்ட் அக்கவுன்ட் மூலம் உங்களது அவுட்லுக் கணக்கில் லாக் இன் செய்து அசிகபட்சம் 5 ஜி.பி. வரையிலான தரவுகளை பரிமாற்றம் செய்யலாம்.

5 – டிராப் பாக்ஸ்: டிராப் பாக்ஸ் சேவையை கொண்டு 5 ஜி.பி. வரையிலான தரவுகளை பரிமாற்றம் செய்யலாம். இதன் க்ரோம் எக்ஸ்டென்ஷன் கொண்டு ஜிமெயில் சேவையில் இன்டகிரேட் செய்து கொள்ளவும் முடியும்.

6 – டிராப்-சென்ட்: இந்த சேவையில் பதிவு செய்து தரவுகளை பரிமாற்றம் செய்ய துவங்கலாம். பிரத்யேக தரவுகளை பரிமாற்றம் செய்யும் வசதிகளான மைக்ரோசாஃப்ட் அவுட்லுக் பிளக்-இன் கொண்டு பயனர்கள் அதிக மெமரி கொண்ட தரவுகளை மின்னஞ்சலில் சேர்த்துக் கொண்டு அதனை டிராப்சென்ட் அக்கவுன்ட் மூலம் அனுப்பலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*