தளம் புதிது: ரெஸ்யூம் உருவாக்க உதவும் தளம்

வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும்போது ரெஸ்யூம் தொடர்பாகப் பலவிதக் கேள்விகளும் சந்தேகங்களும் இருக்கலாம். ரெஸ்யூமைத் தயாரிக்கும்போது அது சிறந்ததாக இருக்கிறதா, திறமைகளை எல்லாம் வெளிப்படுத்தும் வகையில் இருக்கிறதா போன்ற கேள்விகள் எழலாம். இந்தக் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் வகையில் நேர்த்தியான முறையில் தொழில்முறை ரெஸ்யூம்களை உருவாக்கிக்கொள்ள ‘மைரெஸ்யூம்பார்மெட்’ தளம் கைகொடுக்கிறது.

இந்தத் தளத்தில் ஐந்தே நிமிடங்களில் நேர்த்தியான ரெஸ்யூமைத் தயார் செய்துவிடலாம். இதிலிருந்து மாதிரி ரெஸ்யூம்களைத் தேர்வு செய்து, அதிலுள்ள அம்சங்களுக்கு ஏற்ப, தனிப்பட்ட தகவல்களை இடம்பெறச்செய்து நமக்கான ரெஸ்யூமை உருவாக்கலாம். முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பைப் பெற்றுத்தந்த ரெஸ்யூம்களின் அடிப்படையில் செயற்கை நுண்ணறிவின் ஆற்றலோடு இந்தத் தளம் ரெஸ்யூம்களை உருவாக்கித் தருகிறது. ரெஸ்யூம்களை பிடிஎப் கோப்பு வடிவிலும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இணையதள முகவரி: https://www.myresumeformat.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*