போட்டோசாப்பில் தமிழ் எழுத்துக்களை டைப் செய்வது எப்படி?

போட்டோசாப்பில் தமிழில் டைப் செய்ய மூன்று மென்பொருள்கள் தேவை.
 
இந்த மென்பொருள் தமிழ் எழுத்துக்களை உள்ளீடு செய்வதற்கு பயன்படுகிறது.
 
NHM CONVERTER :-
 
தமிழ் எழுத்துக்களை TAM மற்றும் TAB பார்மெட்டுக்கு மாற்ற உதவி செய்யும்.
பதிப்பு:-
பதிப்பு மென்பொருளில் மொத்தம் 250 எழுத்துருக்கள் (Fonts) உள்ளது. இதில் 200 TAM எழுத்துருக்கள் மற்றும் 50 TAB எழுத்துருக்கள் உள்ளன.
இந்த மூன்று மென்பொருள்களையும் உங்கள் கணினியில் பதிவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளவும்.
பின் போட்டாசாப்பினை ஒப்பன் செய்யவும். அதில் Edit > Preference > Type மெனுவினை தேர்வு செய்யவும்.

 

தேர்வு செய்தவுடன் தோன்றும் விண்டோவில் Middle Eastern என்பதை தேர்ந்தெடுத்து OK பொத்தானை அழுத்தவும்.
NHM CONVERTER மென்பொருளினை ஒப்பன் செய்து அதில் HNM WRITTER உதவியுடன் டைப் செய்யவும். பின் TAM பார்மெட்டினை தேர்வு செய்து கன்வெர்ட் பொத்தானை அழுத்தவும். கன்வெர்ட் செய்த கோடினை நகலெடுத்து (COPY) போட்டோசாப்பில் ஒட்டவும் (PASTE). இப்போது நீங்கள் விரும்பியவாறு தமிழ் எழுத்துகளை போட்டோசாப்பில் டைப் செய்ய முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*